மேலும் அறிய

Varisu OTT Release: அஜித்துக்கு நெட்ஃப்ளிக்ஸ்... விஜய்க்கு பிரைம்... ஓடிடி தளத்தில் வெளியாகும் வாரிசு!

நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ஹிட் அடித்த படம் வாரிசு. விஜய்யின் 66ஆவது படமாக வெளியான வாரிசு படத்தை இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கிய நிலையில், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு,  பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, சங்கீதா, ஷாம், ஸ்ரீகாந்த்,யோகிபாபு  எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். தமன் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். 

குடும்ப கொண்டாட்டம்

படம் வெளியானது முதலே குடும்பப் படமாக கொண்டாடப்பட்ட வாரிசு மற்றொருபுறம் கருத்தியல் ரீதியாக கலவையான விமர்சனங்களையும் பெற்றது.

மேலும் சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அஜித்தின் துணிவு படத்துடன் நேருக்கு நேர் மோதிய வாரிசு படம் தொடர்ந்து வசூலிலும் நிதானமாக ஹிட் அடித்தது.

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி வாரிசு படம் 300 கோடி வசூலைக் கடந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், இப்படத்தில் ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பு குறித்து எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.

தமன் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆன நிலையில்,முன்னதாக் யூடியூப் தளத்தில் வெளியாகி பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

ஓடிடி ரிலீஸ்

இந்நிலையில், தற்போது வாரிசு படம் வரும் பிப்.22ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமேசான் பிரைம் தளம், தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் ஆகிய பக்கங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக பொங்கல் ரிலீசாக வெளியான அஜித்தின் துணிவு படமும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்றதுடன், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

வசூல் சர்ச்சை

முன்னதாக வாரிசு படத்தில் வசூல் தொகை குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த வசூல் தொகை என்பது சாத்தியமே இல்லை என தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

ஒரு வார காலத்தில் 210 கோடி வசூல் சாத்தியம் என ரசிகர்கள் உள்பட பலரும் சந்தேகம் தெரிவித்த நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், ”மாவட்ட வாரியாக இவர்கள் தகவல் சொல்வதில்லை, கதாநாயகர்களை திருப்திப்படுத்தவே இப்படி செய்கிறார்கள்” என மறைமுகமாக இத்தகவல் உண்மையல்ல எனத் தெரிவித்தார்.

ஆனால் இந்த விமர்சனங்களை கண்டுக்கொள்ளாமல் விஜய் உள்ளிட்ட படக்குழு அனைவரும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Ajith kumar: ஸ்பீடு தெரியும்... இது செம கூலா இருக்கே...! கருப்பு, வெள்ளை உடையில் ஸ்காட்லாந்தில் கார் ஓட்டும் அஜித்! வைரலாகும் வீடியோக்கள்!

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget