Varisu Update: விஜய் டான்ஸூக்கு சிம்பு வாய்ஸ்.. வாவ் அப்டேட் கொடுத்த வாரிசு டீம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
இளைய தளபதி விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'வாரிசு' படத்தில் நடிகர் சிம்பு பாடிய பாடலை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். ரசிகர்கள் உற்சாகம்.
இளைய தளபதி விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் 'வாரிசு' திரைப்படத்தில், நடிகர் சிம்பு ஒரு பெப்பி நம்பர் பாடல் ஒன்றை பாடியுள்ளார் நடிகர் சிம்பு. அந்த பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படத்தின் தயாரிப்பாளர்கள் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த அப்டேட் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிம்பு பாடிய வாரிசு பாடல் :
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தில் ராஜு, சிரிஷ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்க நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. வாரிசு படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. அந்த வகையில் சிம்பு பாடிய அந்த பெப்பி பாடலை டிசம்பர் 2 வது வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள் என்ற தகவல் தற்போது நெருங்கிய வட்டாரம் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம், நடிகர் விஜய் மற்றும் நடிகர் சிம்பு இடையில் உள்ள நட்பை அழகாக வெளிப்படுத்துகிறது. நடிகர் சிம்பு பல பாடல்களை பாடி கவனம் ஈர்த்தவர். அவர் பாடல்கள் அனைத்துமே தெறிக்கவிடும் சக்தி கொண்டவை என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கூட பாலிவுட்டில் வெளியான டபுள் XL திரைப்படத்தில் 'தாலி தாலி...' பாடல் மூலம் பாலிவுட்டில் பாடகராக அறிமுகமாகியுள்ளார்.
The latest buzz is #SilambarasanTR has sung a single in #Varisu for @actorvijay in #Varisu. pic.twitter.com/ybp9BncmXk
— KARTHIK DP (@dp_karthik) November 25, 2022
ஆடியோ லான்ச் விரைவில் :
வாரிசு படத்தின் ரஞ்சிதமே ரஞ்சிதமே... பாடல் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த பாடலை நடிகர் விஜய் சிங்கர் மானசியுடன் இணைந்து பாடியிருந்தார். அந்த வகையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
#VARISU - TamilNadu Release by 7 Screen Studio and Red Giant#VarisuSecondSingle Coming Soon #VarisuAudioLaunch DEC 24th
— INBA EVERTON (@IECINEMAS) November 19, 2022
IN CINEMAS FROM PONGAL 2023
(JAN12)#ThalapathyVijay #RashmikaMandanna #Thaman #VamsiPaidipally pic.twitter.com/bkSOG8RXVq
இப்படம் பொங்கலுக்கு தெலுங்கில் வெளியாவதில் பல சர்ச்சைகள் ஏற்பட்டு தற்போது அனைத்தும் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது. வாரிசு படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வாரிசு படத்தின் வெளியீட்டை மிகவும் எதிர்பார்ப்போடு எதிர்கொண்டு இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.