Varisu Audio Launch: வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா.. அப்பா, அம்மாவோடு வருகைதந்த விஜய்...ஆர்ப்பரித்த ரசிகர்கள்
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் அப்பாவும், அம்மாவும் கலந்து கொண்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் அப்பாவும், அம்மாவும் கலந்து கொண்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் மொபைலில் ஃப்ளாஷ் லைட் அடித்து ஆர்ப்பரித்த விஜய் ரசிகர்கள்....#VarisuAudioLaunch #ActorVijay #Thalapathy66 pic.twitter.com/5ZC3FcYpX9
— Petchi Avudaiappan (@karthik0728) December 24, 2022
இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில், ஏற்கனவே இப்படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி, ஆராரிராரோ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
View this post on Instagram
இதனிடையே இன்றைய தினம் சென்னை நேரு உள்விளையாட்டரங்களில் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவுக்கான அனுமதி பாஸ்கள் அனைத்து மாவட்ட விஜய் தலைமை மன்ற நிர்வாகிகள் மூலம் ரசிகர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், பாஸ் கிடைக்காத ரசிகர்களில் சிலர் தடையை மீறி உள்ளே வந்தனர். இதனால் அவர்களை தடுக்க முயன்ற போலீசாரை தள்ளிவிட்டு உள்ளே சென்ற ரசிகர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
#SAC #Shobha Amma at #VarisuAudioLaunch #என்நெஞ்சில்குடிஇருக்கும்
— 🇦🇷 Rocky 🇦🇷 (@Rocky89116675) December 24, 2022
#ThalapathyVijay @actorvijay pic.twitter.com/hhlhHq7yPV
இந்நிலையில் கிரே கலர் சட்டை, வெள்ளை பேண்ட் சகிதம் மாஸ்ஸாக விஜய் எண்ட்ரி கொடுத்துள்ளார். உடன் விஜய்யின் அப்பாவும்,அம்மாவும் கலந்து கொண்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கருத்து வேறுபாடு காரணமாக விஜய்யும், அவரது அப்பாவான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் பேசாமல் இருந்து வந்த நிலையில் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் குடும்பத்தினருடன் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






















