பல வருடம் கழித்து வெளியாகும் மதகஜராஜா... இறந்துபோன நடிகர்கள்

Published by: ABP NADU

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம் இணைந்து நடித்த மதகஜராஜா திரைப்படம் பல வருடங்கள் கழித்து வெளியாகிறது.

2013-ல் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் சிலர் இடைப்பட்ட காலத்தில் காலமானார்கள்.

மணிவண்ணன்

நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், பாடகர், சமூக ஆர்வலராகவும் இருந்தவர்.

ஜூன் 15, 2013 அன்று மாரடைப்பால், தன் 59 வயதில் உயிரிழந்தார்.

மனோபாலா

தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த இயக்குனராகவும் காமெடியனாகவும் வலம் வந்தவர்

கல்லீரல் செயலிழப்பால், தன் 69 வயதில் மே 3, 2025 அன்று உயிரிழந்தார்.

மயில்சாமி

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர். முக்கிய காமெடியன்களுடன் இணைந்து துணை கதாபாத்திரமாக அதிகம் நடித்துள்ளார்.

பிப்ரவரி 19, 2023 அன்று மாரடைப்பால் ஏற்பட்ட இதய நிறுத்தம் காரணமாக தனது 57 வயதில் உயிரிழந்தார்.

சிட்டி பாபு

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமாக இருந்தவர்.

8 நவம்பர் 2013-ல் மாரடைப்பின் காரணமாக, தன் 49 வயதில் உயிரிழந்தார்.

சீனு மோகன்

தமிழ் முன்னனி மேடை நடிகர். ஏராளமான திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

மாரடைப்பால் 27 டிசம்பர் 2018 அன்று இயற்கை எய்தினார்.