HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
HMPV Virus vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும் கொரோனா வைரசுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் என்னென்ன என்பதை கீழே காணலாம்.
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய அச்சுறுத்தலில் இருந்து உலக நாடுகள் தற்போதுதான் மீண்டு இயல்பு நிலைக்குத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சீனாவில் பரவி வரும் எச்.எம்.பி.வி. வைரஸ் காரணமாக மீண்டும் மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எச்.எம்.பி.வி.:
எச்.எம்.பி.வி. வைரஸ் காரணமாக சீனாவில் வசிக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், சீனாவில் ஊரடங்கு விதிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தியே என்று அங்கு வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
மத்திய அரசும் எச்.எம்.பி.வி. வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், இது புதிய வைரஸ் இல்லை என்றும் மக்களுக்கு நிம்மதியான தகவல் அளித்தது. இருப்பினும், பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ALSO READ | HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
கொரோனா வைரசிற்கும், எச்.எம்.பி.வி. வைரசிற்கும் உள்ள ஒற்றுமைகள்:
எச்.எம்.பி.வி. வைரசும், கோவிட் 19 வைரசிற்கும் இடையே ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன.
1. இரண்டு வைரஸ்களுமே அனைத்து வயதினருக்கும் சுவாசப் பிரச்சினையை உண்டாக்கும் அபாயம் கொண்டது. குழந்தைகள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் குணம் கொண்டது.
2. கொரோனா வைரசுக்கும், எச்.எம்.பி.வி. வைரசிற்கும் இடையேயான அறிகுறிகளுக்கு ஏராளமான ஒற்றுமைகள் உள்ளது. இந்த இரண்டு வைரஸ்கள் பாதிப்பு ஏற்பட்டால் இருமல், காய்ச்சல், சுவாசப் பிரச்சினை, மூச்சுத்திணறல் ஏற்படுவது அறிகுறி ஆகும்.
3. கொரோனா வைரஸ் மற்றும் எச்.எம்.பி.வி. வைரஸ் இரண்டுமே பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவும் தன்மை கொண்டது. இருமல், தும்மல், நெருக்கமான தொடர்பு காரணமாக இந்த இரண்டு வைரஸ்களும் ஒருவரிடம் இருந்த மற்றொருவருக்கு பரவுகிறது.
எச்.எம்.பி.வி.வைரசுக்கு தடுப்பூசி உண்டா?
எச்.எம்.பி.வி.வைரசுக்கு இதுவரைத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக எச்.எம்.பி.வி. வைரஸ் பரவுவதலைத் தடுக்க முடியும்.
கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். மூக்கு, கண்கள், வாய் போன்ற இடங்களை கைகளை கழுவாமல் தொடக்கூடாது. எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களிடம் பொருட்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடாது.