மேலும் அறிய

Entertainment Headlines: மாரி செல்வராஜூக்கு ஆதரவாக பேசிய வடிவேலு! தமன்னாவின் சொத்து மதிப்பு - சினிமா ரவுண்ட் அப்

இன்றைய சினிமா தலைப்புச் செய்திகளை பார்க்கலாம்

  • Vadivelu: " திருநெல்வேலி அவனோட ஊருடா" மாரி செல்வராஜூக்கு ஆதரவாக வடிவேலு ஆவேசம்!

ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வடிவேலு, “இன்னைக்கு நம்ம அரசாங்கம் எவ்வளவோ சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது. சென்னையில் புயல் வந்துச்சு. அதை பெரிய அரசியல் ஆக்கிட்டாங்க. ஆனால் தென் மாவட்டங்களில் புயல் வந்துச்சு. அங்கெல்லாம் அரசியல் பண்ண முடியாது. ஏனென்றால் தண்ணி பிச்சிகிட்டு போகுது. எங்க அரசியல் ஆக்க முடியும். ஏனென்றால் எவன் எங்க இருக்கான்னே தெரியல. இதே அரசியல அங்க போய் பண்ண முடியுமா?.

 முடியல,அதான் கத்துறான். அதுல ஒருத்தன் சொல்றான், அவன் ஏன் டைரக்டர் (மாரி செல்வராஜ்) அங்க போறான்னு கேக்குறான். அவனோட ஊருடா அது. அந்த ஊருக்குள்ள பள்ளம் எங்க இருக்கு, மேடு எங்க இருக்கு எல்லாமே அவனுக்கு தானே தெரியும். அங்க போகக்கூடாதா? அவன் ஊர்ல அவன் போகாம வேற யாருடா போக முடியும்”. இவ்வாறு அவர் பேசி உள்ளார். மேலும் படிக்க

  • Soodhu Kavvum 2: பரிசோதனைக்கு தயாராகும் ”சூது கவ்வும்” படத்தின் 2 ஆம் பாகம்.. எக்ஸ்க்ளூசிவ் கிளிக்ஸ் இதோ..!

'சூது கவ்வும் 2 : நாடும் நாட்டு மக்களும்’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இந்த பாகத்தையும் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. எம்.எஸ். அர்ஜுன் இயக்கும் இப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்கிறார். மேலும் கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கும் இந்த நிலையில் படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது படக்குழு.மேலும் படிக்க

  • Ilaiyaraaja - Pa.Ranjith: திடீரென இளையராஜாவை சந்தித்த பா.ரஞ்சித் - பரிசாக கொடுத்த புத்தகங்கள் என்னென்ன தெரியுமா?

இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்த புகைப்படங்களை பா.ரஞ்சித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்போது அவருக்கு நீலம் பதிப்பகம் வெளியிட்ட பாபாசாகேபின் காதல் கடிதம், விசாவுக்காக காத்திருக்கிறேன் ஆகிய இருபுத்தகங்களை பரிசாக வழங்கினார். மேலும் அந்த புகைப்படத்தில், “எண்ணமெல்லாம் வண்ணமம்மா” என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

  • Tamannaah Net Worth : காதலரை விட 6 மடங்கு அதிகம்.. தமன்னாவின் சொத்து மதிப்பு தெரியுமா?

நடிகை தமன்னா - நடிகர் விஜய் வர்மா இருவரும் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் சமீபத்தில் தான் அவர்களின் உறவை தமன்னா உறுதிப்படுத்தினார். நெட்ஃப்ளிக்ஸின்  ஆன்டாலஜி படமான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 செட்களில் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு டேட்டிங் வரை சென்றது என்பதை அவரே தெரிவித்து இருந்தார். விஜய் வர்மாவின் சொத்து மதிப்பு 20 கோடி என்றும் அதை விட ஆறு மடங்கு அதிகமான சொத்து மதிப்பை தமன்னா வைத்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க

 

  • Mari Selvaraj: ‘வீட்டை சுற்றி வெள்ளம்.. இறந்தவரை இங்கேயே புதைச்சுட்டோம்’ - மாரி செல்வராஜை அதிர வைத்த நபர்

இப்படியான நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இயக்குநர் மாரி செல்வராஜ், திருநெல்வேலி எல்லைப் பகுதியில் உள்ள செய்துங்கநல்லூர் அருகே வசித்து வருகிறார். மழை வெள்ளத்திற்கு அவருடைய வீடும், அவர் இருக்கும் பகுதிகளும் தப்பவில்லை. உடனடியாக களத்தில் இறங்கி மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். நிவாரணப் பொருட்கள் வழங்க சென்ற ஒரு இடத்தில் தங்கள் வீட்டில் இறப்பு நிகழ்ந்ததால் வீட்டின் பின்புறம் புதைத்து விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முறைப்படி விஏஓவிடம் தகவல் தெரிவித்து விட்டதாக சொன்னாலும் வெள்ளம் சென்று கொண்டிருந்த போதும் இதுபோன்ற உயிரிழப்புகள், மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாவது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. மேலும் படிக்க

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்? 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்? 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்? 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்? 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
Embed widget