மேலும் அறிய

Vadhandhi:அமேசான் ப்ரைமில் வெளியாகும் எஸ்.ஜே.சூர்யாவின் வதந்தி வெப் சீரிஸ்.. ரிலீஸ் தேதி தெரியுமா?

ப்ரைம் வீடியோவின் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தமிழ் க்ரைம் த்ரில்லர் திரைப்படமான, வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி, டிசம்பர் 2 அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது.

வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் புஷ்கர் மற்றும் காயத்ரி, ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கிய இந்த அமேசான் ஒரிஜினல் தொடர்  ஸ்ட்ரீமிங் வெளியீட்டில் பன்முகத் திரைப்படக் கலைஞர் எஸ்.ஜே. சூர்யா தனது அறிமுகத்தை தொடங்குகிறார்.  

வெலோனி என்ற பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடிக்கும் சஞ்சனாவும் இந்தத் தொடரில் முதல் முதலாக அறிமுகமாகிறார், மற்றும்  லைலா, எம். நாசர், விவேக் பிரசன்னா, குமரன், மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் அடங்கிய ஒரு நட்சத்திரப்பட்டாளமே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

அமேசானின் ஒரிஜினல் தொடரான வதந்தி– தி ஃபேபிள் ஆஃப் வெலோனி திரைப்படத்தின் உலகளாவிய முதல் காட்சி வெளியீடு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்ட சுழல் –தி வோர்டெக்ஸ்-யை தொடர்ந்து இந்த தமிழ் க்ரைம் த்ரில்லரை, புஷ்கர் (Pushkar) மற்றும் காயத்ரி (Gayatri) இருவரும் இணைந்து, வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரில் தயாரிக்க, ஆண்ட்ரூ லூயிஸ் (Andrew Louis) ஆல் இது உருவாக்கப்பட்டுள்ளது. எட்டு பகுதிகளைக் கொண்ட இந்த த்ரில்லர் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், டிசம்பர் 2 ஆம் தேதி முதல் பிரைம் உறுப்பினர்களுக்கு இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் கிடைக்கும். 

சற்று மனக்கலக்கத்துடன்  ஆனால் மன உறுதியோடு கூடிய  காவல் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யா, பொய்களால் ஆன ஒரு வலையில் தான் சிக்குண்டுள்ளதை அறிகிறார், ஆனாலும்  உண்மையைக் கண்டறிவதில் தன் விடா முயற்சியை தொடர்கிறார். ஓரு செல்வச் செழிப்பான அடுக்குகளால் ஆன ஒரு சிறிய நகரம் வெலோனியின் கதையை சிக்கலானதாக ஆக்கும், அதே சமயம் அதை ஒரு புதிரான விந்தைகள் நிறைந்ததாகவும் மாற செய்கிறது.இந்த திரைப்படத்தில்  லைலா, எம். நாசர், விவேக் பிரசன்னா குமரன் மற்றும் ஸ்மிருதி வெங்கட் (Smruthi Venkat) போன்ற பிரபலமான நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

"எங்கள் பார்வையாளர்களின் வளர்ந்து வரும் ரசனைக்கு இணங்க அதற்கு மேலும் அதிகமான தீனியை அவர்களுக்கு வழங்கும் வகையில் உண்மையான, நிலைநாட்டப்பட்ட மற்றும் பல்வேறு வகையான கதைக்களங்களை நாங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம், அதன் ஒரு தொடர்ச்சியாக வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனியின் கதையை அவர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெரு  மகிழ்ச்சி அடைகிறோம்" என்று பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் இன்  தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார்.

மேலும் சுழல் – தி வோர்டெக்ஸ்க்குக் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து., புஷ்கர் மற்றும் காயத்ரியுடனான எங்களின் இரண்டாவது கூட்டு முயற்சியில் உருவான வதந்தி – எங்கள் பிராந்திய உள்ளடக்க வழங்கல்களுக்கு மேலும் வலுவூட்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பண்படுத்தப்படாத, உணர்வுகளின் பின்னணியோடு மனதைக் கொள்ளைக்கொள்ளும் இந்த அற்புதமான திரில்லரை  ஆண்ட்ரூ லூயிஸ் திறம்பட எழுதி இயக்கியிருக்கிறார்” என்று பேசினார். 

“இன்றைய ரசிகர்கள் தாங்கள் எதை விரும்பிப் பார்ப்பது என்பதில் ஒரு தெளிவான சிந்தனையை கொண்டிருப்பதால், அவர்களுக்கான ஒரு வித்தியாசமான, தனித்துவம் வாய்ந்த மற்றும் மனதில் ஆழ்ந்து பதியக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்ட கதைக்களத்தை உருவாக்குவது மிக முக்கியமான ஒன்று என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். குற்றச்செயல்களை கலை வடிவத்தின் ஒரு யுத்தியாக கையாளுவது கதை சொல்வதை ஒரு அலங்காரமற்ற மற்றும் இயற்கையான முழுமையான வடிவத்தில் வெளிப்படுத்துகிறது. வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனியின் மூலமாக, பார்வையாளர்களின் கற்பனாசக்தியை  முழுமையாக வெளிக்கொண்டுவந்து, சமூகத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்குவதே எங்கள் நோக்கம். இந்தக் கதை பார்வையாளர்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், இறுதியில் நன்றியறிவிப்பு வெளியிட்ட பிறகும் நீண்ட நேரத்திற்கு அவர்களை சிந்தனை வயப்படுத்தும்" என்று இந்தத் தொடரின் படைப்பாளிகளான புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் தெரிவித்தனர். 

எழுத்தாளர்-இயக்குனர்-படைப்பாளி என்ற பன்முகம் கொண்ட ஆண்ட்ரூ லூயிஸுடன் இந்த பரபரப்பான க்ரைம் த்ரில்லரை உருவாக்க ஒரு பொதுவான கண்ணோட்டத்தைப்  பகிர்ந்து கொண்டு இணைந்து பணியாற்றுவதில் நாங்கள்  அருமையாக உணர்ந்தோம். எஸ்.ஜே. சூர்யா போன்ற ஒரு மூத்த கலைஞர் தலைமையிலான ஒரு உன்னதமான திறமையுடன் கூடிய நட்சத்திரக் குழுவோடும் மற்றும் சஞ்சனா போன்ற புதிய  அறிமுகங்களோடும் நிறைந்த இந்தத் தொடர் அதன் இறுதிக் காட்சி வரை ரசிகர்களை கட்டுண்டுகிடக்கச்செய்யும்  .இந்த டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியிடப்படும் வதந்தி ரசிகர்களை நிச்சயமாகக் கவரும் என்று நாங்கள் நம்புகிறோம்.” 

ஸ்மார்ட் டி‌வி, மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டி‌வி ஸ்டிக், ஃபயர் டேப்லட்ஸ், ஆப்பிள் டிவி போன்ற இன்னும் பலவற்றுக்கான  பிரைம் வீடியோ ஆப் மூலமாக இந்த சீரீசை பிரைம் உறுப்பினர்கள் எந்த இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் காணலாம். பிரைம் உறுப்பினர்கள் வீடியோ ஆப்  இல் எபிசொடுகளை அவர்களது கைபேசி, மற்றும் டேப்லட்டுக்களில் பதிவிறக்கம் செய்து கொண்டு இணைய தொடர்பு இல்லாத இடங்களிலும் எந்த ஒரு கட்டணமுமின்றி காணலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget