மேலும் அறிய
Advertisement
Vadakkupatti Ramasamy: ”சாமியே இல்லனு சுத்திட்டு இருந்த ராமசாமி தான நீ?” : கவனம் ஈர்த்த வடக்குப்பட்டி ராமசாமி டிரெய்லர்
Vadakkupatti Ramasamy: ””ஏண்டா டேய் ... சாமியே இல்லனு ஊருக்குள்ள சுத்திட்டு இருந்தியே அந்த ராமசாமி தான நீ? “ என கேட்கும் வசனங்கள் கவனத்தை ஈர்த்த வடக்குப்பட்டி ராமசாமி டிரெய்லர்
Vadakkupatti Ramasamy: சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
கலக்கப்போவது என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமான நடிகர் சந்தானம் சினிமாவில் காமெடி நடிகராக உயர்ந்தார். சந்தானம் காமெடிக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உருவான நிலையில், ஹீரோவாகவும் நடிக்க தொடங்கினார். சந்தானம் நடிப்பில் வெளிவந்த பேய் படங்களும், காமெடி படங்களும் வெற்றி பெற்றிருந்தாலும் சில படங்கள் சொதப்பலால் வசூலில் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் தற்போது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் அறிவிப்பு வெளியாகி கவனத்தை ஈர்த்தது. சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தை ஃபீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரிக்கிறார். படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, விட்னஸ் பட இயக்குநர் தீபக் ஒளிப்பதிவு செய்கிறார்.
காமெடி ஜானரில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமியின் டிரெய்லர் உருவாகி வரவேற்பை பெற்றுள்ளது. டிரெய்லரின் தொடக்கத்திலேயே “ நேர்ல பாத்தா” என்ற டயலாக் மாறி மாறி பேசி படம் முழுக்க தரமான காமெடி சம்பவம் இருக்கு என்பதை காட்டுகிறது. அடுத்ததாக, ”ஏண்டா டேய் ... சாமியே இல்லனு ஊருக்குள்ள சுத்திட்டு இருந்தியே அந்த ராமசாமி தான நீ? “ என கேட்கும் வசனங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. கடைசியாக, ‘இவன் சரியான பைத்தியம் இல்ல; சரியாகாத பைத்தியம்’ போன்ற வார்த்தை விளையாட்டின் வசனங்கள் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஏண்டா டேய் ... சாமியே இல்லனு ஊருக்குள்ள சுத்திட்டு இருந்தியே அந்த ராமசாமி தான நீ?
— அகுல் - தொண்டை நாட்டு இளவரசன் (@Thondainadu) January 12, 2024
Theatrical Rights : @RedGiantMovies_
#VadakkupattiRamasamy
Release date : Feb 2
ட்ரெய்லர் : https://t.co/KCMw9PKaGw pic.twitter.com/MCC0VT4ksY
மேலும் படிக்க: KH237: கமல் நடிக்கும் KH237 படத்தை இயக்கும் இரட்டை சகோதரர்கள் : மாஸ் அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்..
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion