(Source: ECI/ABP News/ABP Majha)
Ramcharan Upasana: 10 ஆண்டுகளுக்கு முந்தைய கருமுட்டையா..? கர்ப்பம் தரித்த ரகசியம் என்ன? மனம் திறந்த ராம்சரண் மனைவி..!
திருமணத்தின் ஆரம்ப காலகட்டத்தில் நாங்கள் இருவருமே கருமுட்டை சேமிப்பு குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுத்தோம். அதனால் சரியான தருணத்தில் தாய்மை அடைந்ததை எண்ணி மகிழ்ச்சி.
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் ராம் சரணும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். நடிகர் ராம் சரணுக்கு கடந்த ஆண்டு 2012ம் ஆண்டு உபாசனா என்பவருடன் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மிகவும் சந்தோஷமான அவர்களின் திருமண வாழ்க்கையில் கணவன் - மனைவி என்ற பந்தத்தையும் கடந்து பெற்றோர்கள் என்ற அந்தஸ்தை பெற உள்ளனர்.
பேபி பம்புடன் உபாசனா :
நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா காமினேனி தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கு பிறகு முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கும் ராம் சரண் - உபாசனா காமினேனி அன்னையர் தினத்தை முன்னிட்டு 8 மாத பேபி பம்ப் புகைப்படத்தை வெளியிட்டு அன்னையர் தினத்தை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறோம். சரியான நேரத்தில் சரியான காரணத்திற்காக தாய்மை அடைந்ததை எண்ணி பெருமிதம் கொள்வதாக பதிவிட்டு இருந்தார்.
உபாசனா கொடுத்த அதிர்ச்சி :
மேலும் தனது கர்ப்பம் குறித்து உபாசனா அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறிய தகவல் அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. திருமணத்தின் ஆரம்ப காலகட்டத்தில் நாங்கள் இருவருமே கலந்து எடுத்த முடிவு தான் கருமுட்டையை பாதுகாக்க வேண்டும் என்பது. பலதரப்பட்ட காரணங்களால் நாங்கள் இருவருமே அவரவரின் வேலைகளில் பிஸியாக கவனம் செலுத்த வேண்டியிருந்தது. நிலையான ஒரு இடத்தை அடைந்த பிறகு தான் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என முடிவு செய்து இருந்தோம். அதன் படி சரியான நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள போவதை எண்ணி மிகவும் உற்சாகத்துடன் பேசியிருந்தார் உபாசனா. இதை கேட்ட ரசிகர்கள் அப்போ 10 ஆண்டுகளுக்கு பிறகு ராம் சரண் - உபாசனா தம்பதி சேமித்து வைத்திருந்த கருமுட்டை மூலம் தான் உபாசனா கர்ப்பமாக இருக்கிறாரா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள். இது ராம் சரண் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.
கருமுட்டை சேமிப்பு :
கருமுட்டை சேமிப்பு என்பது மேலை நாடுகளில் பல ஆண்டு காலமாக சர்வ சாதாரணமாக நடைபெறும் ஒரு விஷயம். நமது இந்தியாவில் சமீபகாலமாக தான் இது போன்ற நவீன மருத்துவ முறைகள் குறித்து கேள்விப்படுகிறோம். சுமார் 5 ஆண்டுகளாக தான் இது இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்ற ஒரு நவீன முறை இருப்பது பற்றி இந்தியாவில் பலரும் அறிந்து கூட இருக்க மாட்டார்கள்.