மேலும் அறிய

Udhayanidhi Stalin: முதல் நீ.. முடிவும் நீ.. உதயநிதியின் முதல் மற்றும் கடைசி படத்தில் நடிகர் வடிவேலு..!

நடிகராக தனது திரை வாழ்க்கையை ஆதவன் படத்தில் நடிகர் வடிவேலுவுடன் தொடங்கி மாமன்னன் படத்தில் முடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய பேச்சாக இருப்பது மாமன்னன் திரைப்படம் தான். அதற்கு முக்கிய காரணம், தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சராக உள்ள விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கதாநாயகனாக நடித்து வெளிவருகிறது என்பது தான். மேலும், பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கி தனி முத்திரை பதித்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. அதேபோல், எப்போதும் நகைச்சுவை நடிகராகவே நாம் பார்த்து பழக்கப்பட்ட வைகைப்புயல் வடிவேலு இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வில்லனாக ஃபஹத் ஃபாசில் மற்றும் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் என்ற  பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார் யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். 

இந்த படத்தில் உதயநிதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் அதன் பின்னர், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதால், பணிசுமை காரணமாக ராஜ்கமல் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து உதயநிதி விலகினார். 

இதனால் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படம் தான் உதயநிதி நடிக்கவுள்ள கடைசி படம் என அறிவிக்கப்பட்டது. இதனாலும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. உதயநிதியின் திரை வாழ்க்கை என்பது, கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் படத்தில், உதயநிதி சிறிய காதாப்பாத்திரத்தில் நடிகர் வைகைப் புயல் வடிவேலுவுடன் தோன்றியிருப்பார். அதன் பின்னர் இயக்குநர் எம்.ராஜேஸ் இயக்கத்தில் ”ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தில் கதாநாகனாக அறிமுகமானார். 

அதைத்தொடர்ந்து மாமன்னன் படம் வரை இதுவரை 18 படங்களில் நடித்துள்ளார். இதில் ஆதவன் மற்றும் வணக்கம் சென்னை படத்தில் கேமியோ கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பார். தற்போது மாமன்னன் படத்துடன் திரை வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விலகுவதாக உதயநிதி அறிவித்துள்ளதால், உதயநிதி ஆதவன் படத்தி தோன்றிய காட்சியில் வடிவேலுவுடன் இருப்பதைப்போல், இறுதிப் படத்திலும் நடிகர் வடிவேலுவுடன் நடித்துள்ளார். இதனை சினிமா ரசிகர்கள் இது குறித்து ஆர்வமாக பேசி வருகின்றனர். மேலும், உதயநிதி நடித்த படங்களில் அவரது நடிப்புக்கு பெயர் வாங்கித் தந்த படங்களாக, மனிதன், நெஞ்சுக்கு நீதி மற்றும் மாமன்னன் படங்கள் அமைந்துள்ளன. அதேபோல், உதயநிதியின் ரசிகர்கள் அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
Embed widget