Jana Nayagan: அள்ளு.. அள்ளு..! தள்ளு.. தள்ளு..! ஜனநாயகன் டிக்கெட்டுகளை அள்ளும் தவெக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள்!
முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் டிக்கெட்டுகள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி திரைப்படம் ஜனநாயகன். அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அரசியலிலே முழு நேர கவனம் செலுத்த உள்ளதால் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார்.
கடைசி படம் ஜனநாயகன்:
அவர் அரசியல் கட்சி தொடங்கியது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து முழுமையாக விலகியது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வேதனையை உண்டாக்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கடந்த பொங்கல் பண்டிகை விருந்தாக திரைக்கு வந்திருக்க வேண்டிய திரைப்படம் ஜனநாயகன்.
டிக்கெட்டுகளை வாங்கிக் குவிக்கும் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள்:
ஆனால், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் சிரமங்கள் காரணமாக அந்த படம் வெளியாகாமலே இருந்து வந்தது. இந்த சூழலில், ஜனநாயகன் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகிறது. தவெக அமைச்சரவையிலும், எம்எல்ஏ-க்களாக இருப்பவர்களின் பெரும்பாலானோர் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்து அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளாக பணியாற்றியவர்கள்.
அவர்கள் தற்போது அமைச்சர்களாகவும், எம்எல்ஏ-க்களாகவும் பதவியேற்றிருந்தாலும் விஜய்யின் ஜனநாயக திரைப்பட டிக்கெட்டுகளை வாங்கிக் குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் இந்த டிக்கெட்டுகளை தவெக சார்பில் அவர்கள் விநியோகித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
கொண்டாடும் ரசிகர்கள்:
முதலமைச்சர் விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாடவும், வெற்றிப்படமாகவும் மாற்றவும் திட்டமிட்டுள்ளனர். திரையரங்குகளில் விஜய்யின் நடிகராக தனது கேரியரைத் தொடங்கியது முதல் ஜனநாயகன் பட்ம வரையிலான கெட்டப்புகள், தவெக தொடங்கியது முதலே முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றது வரையிலான புகைப்படங்கள் அடங்கிய பேனர்களை திரையரங்குகளில் நேற்று முதலே வைக்கத் தொடங்கி வருகின்றனர்.
திரையரங்குகளைச் சுற்றி தவெக கொடி கட்டியும் விஜய் ரசிகர்களும், தவெக நிர்வாகிகளும் அசத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி விஜய்யின் கடைசி படம் வெளியாவதை முன்னிட்டு அன்னதானம், ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கும் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் படம்:
ஜனநாயகன் திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மமைதா பைஜு, சன்னி தியோல், பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன் ஆகிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். இந்த படம் தெலுங்கு திரைப்படமான பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அந்த படத்தின் திரைக்கதையுடன் எச்.வினோத் தன்னுடைய திரைக்கதையும் இணைத்து எழுதியுள்ளார்.
இந்த படம் அவரது அரசியல் வருகைக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்பதால் அவரது வருகைக்கு ஏற்ப சில அரசியல் வசனங்கள் இடம்பெற்றுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















