மேலும் அறிய

Thalapathy 69: விஜய்யின் கடைசி படம்! இன்று மீண்டும் தொடங்கிய ஷூட்டிங் - குஷியில் ரசிகர்கள்!

நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படமான தளபதி 69-ன் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

தமிழ் திரையுலகின் உச்சபட்ச நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய இவர் திரையுலகில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, அவரது நடிப்பில் உருவாகும் கடைசித் திரைப்படம் தளபதி 69 படப்பூஜை கடந்த மாதம் தொடங்கியது.

தளபதி 69 படப்பிடிப்பு தொடக்கம்:

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான எச்.வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பிறகு நடிகர் விஜய் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற அரசியல் மாநாட்டிற்கு பிறகு விஜய் பல்வேறு அரசியல் விமர்சனங்களையும், ஆதரவுகளையும் சந்தித்து வருகிறார்.

சட்டமன்ற தேர்தலுக்காக முழு மூச்சில் பணியாற்றி வரும் விஜய், தனது கடைசி படத்தின் படப்பிடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், அவரது கடைசி படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். அவருடன் பிரபல இந்தி நடிகர் பாபி தியோல் நடிக்கிறார்.

நட்சத்திர பட்டாளம்:

விஜய் அரசியலுக்கு வரும் முன்னர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த படத்தை உருவாக்க விஜய் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், நரேன், ப்ரியாமணி, மமைதா பாஜூ, மோனிஷா ப்ளெஸ்ஸி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ராகவ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். கன்னட திரையுலகின் மிகப்பெரிய விநியோகஸ்த நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தமிழில் முதன்முறையாக இந்த படத்தை தயாரிக்கிறது. மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் அரசியல் த்ரில்லர் கதையாக உருவாக உள்ளது. இந்த படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர் திரையுலகில் இருந்து விலகியிருப்பது மிகப்பெரிய சோகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.  இதனால், அவருடைய கடைசி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு அறிவிப்பு வீடியோ மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி 69 படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget