மேலும் அறிய

Watch Video: சர்ச்சை மேல் சர்ச்சை; மீண்டும் TTF வாசன் வழக்குப்பதிவு; பொதுஇடத்தில் பொளந்து கட்டிய போலீஸ்!

 TTF வாசன் கலந்து கொண்ட தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கூட்டம் அதிகமானதால் போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த  TTF வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்தார். இவருக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்கள் இருக்கும் நிலையில் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினார். அவருக்கு கூடிய கூட்டத்தை கண்டு பொதுமக்கள் மிரண்டனர். இணையத்தில் சரமாரியாக டிடிஎஃப் வாசன் மீது விமர்சனம் எழுந்தது. 

இவரது பைக் ஸ்டண்டுகள், நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது என இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதாக சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட டிடிஎஃப் வாசன், தான் பயிற்சி எடுத்துக் கொண்டே இத்தகைய ஸ்டண்டுகளில் ஈடுபடுவதாகவும், அதிவேகமாக பைக் ஓட்டியதாக சொல்லப்பட்ட வீடியோ ஜமுனா ஹைவேஸ் சாலையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த மரக்கடை அதிபரும், பிரபல யூட்யூபருமான  ஜி.பி.முத்துவை சந்தித்த TTF வாசன், அவரை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பைக்கை ஓட்டியுள்ளார். வாகன நெருக்கடி நிறைந்த சாலையில் 150 கி.மீ.க்கு மேலான வேகத்தில் செல்லும் TTF வாசன், ஜி.பி.முத்துவுக்கு மரண பயத்தை காட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இதனைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவர் கலந்து கொண்ட நிகழ்வில் போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடந்தது என்ன? 

கடலூர் புதுப்பாளையம் பகுதியில் உள்ள சினிமா அலுவலகம் ஒன்றை திறந்த வைக்க இன்று பிற்பகல் 2 மணி அளவில் TTF வாசன் அங்கு வந்தார். அவர் வருவதை முன்னமே தெரிந்து கொண்ட அவரது ஃபாலோயர்கள் அங்கு பைக்குகளில் வந்து அதிக சத்தத்துடன் ஹாரனை எழுப்பினர். தொடர்ந்து அங்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, தெருக்களில் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக கூட்டம் கூட்டியது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா?  பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர்  அடித்து கூறிய அக்ஷிதா!
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா? பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் அடித்து கூறிய அக்ஷிதா!
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget