மேலும் அறிய

Manjal Veeran : 12-ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை...மஞ்சள் வீரன் இயக்குநர்

12-ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செல்லம் தெரிவித்துள்ளார்

நடிகர் விஜய் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியதைப்போல் 12-ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செல்லம் தெரிவித்துள்ளார்.

மஞ்சள் வீரன்

கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரு.வி.க பூங்கா என்ற படத்தை இயக்கி நடித்தவர் செல்அம்.  இவர் தற்போது யூட்யூப் பிரபலம் டிடிஎஃப் வாசனை வைத்து மஞ்சள் வீரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பூஜை விமரிசையாக நடைபெற்ற நிலையில் ஷூட்டிங் போகலாம் என நினைத்த நேரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விபத்தில் டிடிஎஃப் வாசன் சிறை சென்றார்.

கிட்டத்தட்ட ஒன்றரை மாத சிறைவாசத்துக்குப் பின் டிடிஎஃப் வாசன் ஜாமினில் வெளியே வந்தார். இப்படியான நிலையில் இந்த சம்பவத்தால் மஞ்சள் வீரன் படப்பிடிப்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது. 

இதனைத் தொடர்ந்து தற்போது மஞ்சள் வீரன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இப்படத்தில் டி.டி.எஃப் வாசன், கூல் சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிக்க இருக்கிறார்கள். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த படத்தின் இயக்குநர் செல்அம் மஞ்சள் வீரன் படத்தின் மிகப்பெரிய அப்டேட் ஒன்று விரைவில் வெளியாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் நடிகர் விஜய் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கியதைப்போல் தானும் 12-ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில்..

தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை

"சிறந்த மதிப்பெண் எடுத்தவர்களை எல்லாரும் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு நாம் ஊக்கப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள் அவர்கள் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டுதான் இருக்கப்போகிறார்கள்.

ஆனால் தோல்வி அடைந்தவர்களை ஊக்கப்படுத்தத்தான் இங்கு ஆள் இல்லை. நான் எடுத்த முதல் படம் திரு.வி.க பூங்கா தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்குப் பிறகு என்னையே சுமக்க முடியாத நிலையில்தான் நான் இருந்தேன் அதை எல்லாம் கடந்து இப்போது மஞ்சள் வீரன் படம் எனக்கு கிடைத்திருக்கிறது.

இதனால் 12 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு நான் ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்திருக்கிறேன். 

மஞ்சள் வீரன் படத்தின் மிகப்பெரிய அப்டேட் ஒன்று விரைவில் வெளியாக இருக்கிறது.  பிளாஷ் நியூஸ் வரும் அளவிற்கு இந்த அப்டேட் பெரிதாக இருக்கும் " என்று அவர் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட " ஃபீல் மை லவ் " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை ஓரம்கட்டிய கட்டா குஸ்தி 2 படக்குழு..பாராட்டுக்களை சுருட்டிய விஷ்ணு விஷால்
ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை ஓரம்கட்டிய கட்டா குஸ்தி 2 படக்குழு..பாராட்டுக்களை சுருட்டிய விஷ்ணு விஷால்
Actress Uma: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட பிரபல நடிகை.. சிகிச்சையின்போது வெளியான புகைப்படம்!
Actress Uma: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட பிரபல நடிகை.. சிகிச்சையின்போது வெளியான புகைப்படம்!
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget