மேலும் அறிய

Actress Uma: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட பிரபல நடிகை.. சிகிச்சையின்போது வெளியான புகைப்படம்!

2015ம் ஆண்டு திருமணம் செய்துக்  கொண்ட பிறகு உமா சினிமாவில் நடிக்கவே இல்லை. இந்த நிலையில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

புற்றுநோயால் நடிகை உமா சங்கரி பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகை சுமித்ராவின் மகள்

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகைகளில் அதிகம் கவனிக்கப்படாமல் போனவர் உமா சங்கரி. கன்னட கமர்ஷியல் இயக்குநர் ராஜேந்திர பாபு மற்றும் தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகையாக திகழ்ந்த சுமித்ராவின் மகளான உமா சினிமாவில் 2000ம் ஆண்டு சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 

தொடர்ந்து வானவில், கலகலப்பு, கடல் பூக்கள், சொக்கத்தங்கம், விகடன், சூரி, தென்றல், ரைட்டா தப்பா, செல்வம், அமுதே, கோவை பிரதர்ஸ், இலக்கணம், அடைக்கலம், மணிகண்டா, ரசிகர் மன்றம், பாக்யலட்சுமி என பல படங்களில் நடித்தார். கடைசியாக அஜித் நடித்த வலிமை படத்தில் சிறிய வயது சுமித்ரா கேரக்டரில் நடித்திருந்தார்.  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by D R UmaShankari (@uma_shankarii_)

இதில் சொக்கத்தங்கம் மற்றும் கோவை பிரதர்ஸ் படம் ரசிகர்களிடத்தில் அவரைக் கொண்டு சேர்த்தது. ஆனால் 2015ம் ஆண்டு திருமணம் செய்துக்  கொண்ட பிறகு உமா சினிமாவில் நடிக்கவே இல்லை. பலரும் அவர் எங்கிருக்கிறார் என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் உமா ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறேன் என தெரிவித்துள்ளார். 

இரண்டாம் சுற்று சிகிச்சை

அவர் வெளியிட்ட பதிவில், “கீமோ/இம்யூனோ சிகிச்சையின் இரண்டாம் சுற்று இது.நான் ஒவ்வொரு நாளையும் அதன் போக்கில் எதிர்கொள்கிறேன். கடினமான நாட்களை எப்படிச் சமாளிப்பது என்று கற்றுக்கொள்கிறேன், மேலும் வலிமையாக உணரும் நாட்களைக் கொண்டாடுகிறேன். எப்போதும் எனக்குத் துணையாக நிற்கும் என் குடும்பத்தினருக்கும், அன்பும் ஆதரவும் அளிக்கும் என் ரசிகர்களுக்கும் நன்றி. நான் என் பணிகளைத் தொடர்கிறேன், குணமடைகிறேன், மேலும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறேன். முன்னேற்றம் முழுமையானதாக இருக்காது, ஆனால் அது உண்மையானது என தெரிவித்துள்ளார். உமா மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 

இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் விரைவில் நீங்கள் குணமாகி சினிமாவில் நடிக்க வேண்டும். உங்களுடைய தைரியத்தைப் பாராட்டுகிறேன். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்கள். ஏற்கனவே கௌதமி, மமதா மோகந்தாஸ், லிசா ரே, சோனாலி பிந்த்ரா, மனிஷா கொய்ராலா போன்றோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget