மேலும் அறிய

ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை ஓரம்கட்டிய கட்டா குஸ்தி 2 படக்குழு..பாராட்டுக்களை சுருட்டிய விஷ்ணு விஷால்

கட்டா குஸ்தி 2 படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் நாயகி ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கு படக்குழு சார்பாக எந்த வித அங்கீகாரமும் தெரிவிக்கப்படாதது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான வரவேற்பைப் பெற்று உலகளவில் ரூ.46 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக 12 நாட்களில் சுமார் ரூ.46.22 கோடி வசூலை எட்டியுள்ள இந்த படம், விஷ்ணு விஷாலின் திரையுலகப் பயணத்தில் மிகப்பெரிய கமர்சியல் வெற்றிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

கட்டா குஸ்தி வெற்றிவிழாவில் பாரபட்சம்

கட்டா குஸ்தி 2 படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக வெற்றிவிழா ஒருங்கிணைக்கப்பட்டது. வெற்றி விழாவில் விஷ்ணு விஷாலுக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள BMW கார் பரிசளிக்கப்பட்ட நிலையில், இயக்குநருக்கு தங்கச் சங்கிலி மற்றும் காப்பு வழங்கப்பட்டது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் சேர்த்து ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கும் 40 கிராம் வெள்ளிக்காசு மட்டுமே வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் வேறு ஒரு விவாதம் உருவாகியுள்ளது. கட்டா குஸ்தி முதல் பாகமாக இருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பாகமாக இருந்தாலும், கதையின் மையப்புள்ளியாக இருப்பது ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஏற்றுள்ள மல்யுத்த வீராங்கனை கதாபாத்திரம்தான். அந்த கதாபாத்திரம் வலுவாக அமைந்ததால்தான் இந்த திரைப்பட வரிசைக்கு தனித்துவமான அடையாளம் கிடைத்தது

இதனால், "படத்தின் வெற்றிக்கு ஹீரோ மட்டுமல்ல, ஹீரோயினின் அர்ப்பணிப்பும் முக்கிய காரணம். குறிப்பாக கதையே அவரை மையமாகக் கொண்டிருக்கும்போது, அவருக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைத்திருக்க வேண்டாமா?" என்ற கேள்வியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் அர்ப்பணிப்பு

ராட்சசன் படத்திற்குப் பிறகு விஷ்ணு விஷாலின் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக முதல் கட்டா குஸ்தி அமைந்தது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் அர்ப்பணிப்பான நடிப்பு பார்க்கப்பட்டது. அந்த கதாபாத்திரத்திற்காக அவர் உடல் எடையை கணிசமாக அதிகரித்ததோடு, படப்பிடிப்பு முடிந்த பிறகு மீண்டும் பழைய உடல் அமைப்புக்கு திரும்ப மிகுந்த சிரமப்பட்டதாக பல பேட்டிகளில் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல், கட்டா குஸ்தி 2 உருவானபோது மீண்டும் அதே அளவுக்கு உடல் எடையை அதிகரிக்க முடியாது என்று ஆரம்பத்தில் படக்குழுவிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறியிருந்தார். இருப்பினும் கதாபாத்திரத்தின் மீது இருந்த நம்பிக்கையால் மீண்டும் அந்த சவாலை ஏற்று நடித்தார். இப்படிப்பட்ட உடல் மற்றும் மன உழைப்பை கொடுத்த நடிகையாக இருந்தும், வெற்றி விழாவில் அவருக்கு தனிப்பட்ட அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதே தற்போது ரசிகர்களின் ஆதங்கமாக மாறியுள்ளது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Embed widget