மேலும் அறிய
Advertisement
டிடிஎப் வாசன் நடிக்கும் ‘மஞ்சள் வீரன்’ படத்தின் கதி என்ன ? - ஓடி வந்த இயக்குனர்
டிடிஎப் வாசன் கைதானது தொடர்ந்து, வழக்கறிஞர்களுடான ஆலோசனைகளுக்கு பிறகு திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என மஞ்சள் வீரன் திரைப்பட இயக்குனர் செல்லம் தகவல்.
டிடிஎஃப் வாசன்
பிரபல யூடிபர் TTF வாசன் சென்னையில் இருந்து மகாராஷ்டிராவிற்கு இருசக்கர வாகன பயணம் மேற்கொண்டார். சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று குட்டி கரணம் அடித்தபடி சாலை ஓரப்பள்ளத்தில் விழுந்த நிலையில், வாசன் அதிர்ஷ்டவசமாக காயத்துடனே உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் சிக்கிய TTF வாசன் வலது கை முறிவுக்கு காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு சென்னைக்கு திரும்பி சென்று விட்டார்.
5 பிரிவுகளின் கீழ் வழக்கு
இந்நிலையில் அவரது இருசக்கர வாகனம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது ஏற்கனவே 279,336, ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை திருவள்ளூர் அருகே பூங்கா நகர் பகுதியில் இருந்த TTF வாசனை பாலு செட்டி சத்திரம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வாசன் மீது மேலும் கூடுதலாக 308,184,188, மூன்று பிரிவுகள் பதியப்பட்டது. TTF வாசனிடம் பாலு செட்டி சத்திரம் காவல்நிலையத்தில் வைத்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின் மருத்துவ பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
15 நாள் சிறை
மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் என் 1ல் நீதிபதி இனியா கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வாசன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்த நிலையில் அக்டோபர் மூன்றாம் தேதி வரை வாசனை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி இனிய கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார். நீதிபதியின் உத்தரவை அடுத்து நீதிமன்றத்தில் இருந்து வாசனை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
மஞ்சள் வீரன்
இந்நிலையில் டிடிஎப் வாசன் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் வாசன் கைது படக்குழுவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. நீதிமன்ற வளாகத்திற்கு வந்த திரைப்பட இயக்குனர் செல்லத்திடம் கேட்டபோது, கைது வருத்தம் அளிப்பதாகவும் வழக்கறிஞருடன் ஆலோசனைக்கு பிறகு படப்பிடிப்பு குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion