Trisha Next Movie: சல்மான் கானுடன் ஜோடி சேரும் த்ரிஷா.. அஜித் பட இயக்குநரின் அடுத்த படம்.. கலக்கல் தகவல்!
Trisha Krishnan: த்ரிஷா தற்போது அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்து வரும் ஐடண்டிட்டி படத்தில் நடித்து வருகிறார்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான் கான்
பில்லா, ஆரம்பம், யட்சன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணுவர்தன் இந்தியில் இயக்கும் படம் தி புல் (The Bull). சல்மான் கான் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கரண் ஜோகர் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறார்.
சல்மான் கானுடன் இணையும் த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா (Trisha). த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் லியோ மிகப்பெரிய வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். இப்படியான நிலையில் சல்மான் கான் நடிக்கும் புல் படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2010ஆம் ஆண்டு அக்ஷய் குமார் நடித்த கட்டா மீட்டா படத்தில் நடித்த த்ரிஷா இந்தப் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இந்தியில் நடிக்க இருக்கிறார்.
ஐந்தாவது படிக்கும்போதே சல்மான் கான் ரசிகை
When #Trisha was asked to whom would she like to propose, she wished to marry #SalmanKhan & just look at her how lovingly she said Salman Khan ❤️ and she also said that she is a huge fan of Salman since 5th class
— dk (@filmy_deepakk) December 28, 2023
She adores salman so much 🫶🏻
I really want her to be in #TheBull pic.twitter.com/HVf4B8XO6I
ஒரு பக்கம் சல்மான் கான் உடன் த்ரிஷா நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக எதிர்பார்த்து வர, மறுபக்கம் த்ரிஷாவே ஆர்வமாக இருப்பார் என்றுதான் சொல்ல வேண்டும். தான் ஒரு மிகப்பெரிய சல்மான் கான் ரசிகை என்று த்ரிஷா நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘காஃபி வித் டிடி’ நிகழ்ச்சியில் த்ரிஷாவிடம் நிறைய பூக்களை கொடுத்து அதை அவர் யாருக்கு ப்ரோபோஸ் செய்வார் என்று கேட்டபோது தான் சல்மான் கானுக்கு கொடுப்பேன் என்று அவர் கூறினார். மேலும் தான் ஐந்தாவது வகுப்பு படிக்கும் போது இருந்தே மிகப்பெரிய சல்மான் கான் ரசிகையாக இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்
படப்பிடிப்பில்
த்ரிஷா தற்போது அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்து வரும் ஐடண்டிட்டி படத்தில் நடித்து வருகிறார்.