Trisha : எல்லை மீறி போன ரசிகர்.. AI மூலம் த்ரிஷாவுக்கு முத்தம்...வைரலாகும் வீடியோ
ஏ.ஐ மூலம் நடிகை த்ரிஷாவுக்கு முத்தம் கொடுப்பது போல் இளைஞர் ஒருவர் உருவாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
த்ரிஷா
கோலிவுட் சினிமாவின் முடி சூடா அரசியாக இருந்து வருகிறார் நடிகை த்ரிஷா. சமீபத்தில் விஜயின் தி கோட் படத்தில் மட்ட பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மஞ்சள் சேலையில் த்ரிஷா வந்து நடனமாடியதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு 41 வயது என்று சொன்னால் நம்பமாட்டார்கள் என வியந்து பாராட்டி வருகிறார்கள். தலைநகரம் படத்தில் வரும் வடிவேலுவைப் போல் த்ரிஷாவுக்கு முரட்டு தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் இப்படி எல்லை மீறியா போவீங்க என்கிற அளவிற்கு அமைந்துள்ளது ரசிகர் ஒருவரின் செயல்.
ஏஐ மூலம் த்ரிஷாவுக்கு முத்தம்
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சினிமாத் துறையில் பல்வேறு புதுமையான முயற்சிகள் சாத்தியமாகியுள்ளன மறைந்த பாடகர்களின் குரல்களை ஏ.ஐ மூலம் நாம் திரும்பி கேட்டு வருகிறோம். தி கோட் படத்தில் பவதாரினியின் குரல் , வேட்டையன் படத்தில் மலேசியா வாசுதேவன் குரல் என மறைந்த கலைஞர்களின் குரல்களை தத்ரூபமாக நம்மால் உருவாக்க முடிகிறது. அதேபோல் தி கோட் படத்தில் ஏ.ஐ மூலம் மறைந்த நடிகர் விஜயகாந்த் உருவாக்கப்பட்டிருந்தார். ஒரு பக்கம் இப்படியான பாசிட்டிவான முயற்சிகள் நந்துவந்தாலும் இன்னும் சிலர் இந்த தொழில் நுட்பத்தை தகாத முறையில் பயண்படுத்தி வருகிறார்கள்.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் த்ரிஷாவின் ரசிகர் ஒருவர் அவருக்கு முத்தம் கொடுக்கும் விதமாக ஏ.ஐ மூலம் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கின்றன.
Deii Deii Enada Pandra 🥶🙊 pic.twitter.com/oIM8ExVbmm
— SillakiMovies (@sillakimovies) September 22, 2024