நீச்சல் குளம் அருகே மகளை அசத்தலாக போட்டோ எடுத்த ஷாருக்கான் மனைவி - SRK ரியாக்ஷன்!
ஷாருக்கானின் மனைவி கௌரி கான் ஒரு இண்டீரியர் வடிவமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் புதிதாக புகைப்பட கலைஞராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
பாலிவுட் நடிகரும் , சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவருமான ஷாருக்கான் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கமெண்ட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஷாருக்கான் கடந்த 1991 ஆம் ஆண்டு கௌரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அப்போது சின்னத்திரை நடிகார மட்டும்தான் இருந்தார் ஷாருக்கான். ஷாருக், கௌரி தம்பதிக்கு ஆர்யன் கான், சுஹானா, ஆப்ராம் என்கிற மூன்று குழந்தைகள் உள்ளன. அடிக்கடி விவாகரத்து , அடுத்தடுத்த திருமணங்கள் என கடந்து போகும் பாலிவுட் வட்டாரத்தில் நீண்ட கால பந்தத்தில் இருகப்பதாலோ என்னவோ பாலிவுட் வட்டாரத்தில் இவர்கள் கூடுதல் கவனம் பெருகின்றனர். முன்னதாக ஷாருக்கான் திருமணத்திற்கு முன்பு ஹனிமூனிற்கு பாரிஸ் அழைத்து செல்கிறேன் என உறுதி அளித்திருந்தாராம். ஆனால் போதுமான வருமானமும் பணமும் இல்லாத காரணத்தால் படப்பிடிப்பு நடந்த டார்ஜிலிங் பகுதிக்கு மனைவியை அழைத்து சென்றதாக கூறியிருந்தார்.
ஷாருக்கானின் மனைவி கௌரி கான் ஒரு இண்டீரியர் வடிவமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் புதிதாக புகைப்பட கலைஞராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். தனது மகள் சுஹானா கானை மாடலாக வைத்து அவர் எடுத்திருக்கும் புகைப்படங்களை பாலிவுட் ரசிகர்கள் மட்டுமல்லாது, பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். மகள் சுஹானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இந்த புகைப்படங்களுக்கு “ பெப்சி வைத்துக்கொண்டு சிண்டி க்ராஃபோர்டு (நடிகை) போல் பாசாங்கு செய்துக்கொண்டிருக்கிறேன்! “ என குறிப்பிட்டிருந்தார். இதற்கு கீழே கமெண்ட் பதிவு செய்த ஷாருக்கான் “ இங்கே பெப்சி கேன் மட்டும் போட்டோவிற்காக வைத்திருப்பது போல உள்ளதே ! இருந்தாலும் இது அருமையான புகைப்படம் “ என தெரிவித்துள்ளார். கௌரி கான் மற்றும் சுஹானா கான் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்களும் ஷாருக்கானின் கமெண்ட்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
View this post on Instagram
சுஹானா கான் 2019 ஆன் ஆண்டு நியூயார்க் பல்கலைகழகத்தில் சேர்ந்து ஆக்டிங் குறித்த படிப்பை தேர்வு செய்து படித்து வருகிறார். முன்னதாக இங்கிலாந்தில் உள்ள ஆர்டிங்லி கல்லூரியில் பட்டம் பெற்றார். தந்தையை போலவே சுஹானா கானும் நடிப்பு துறையை தேர்வு செய்துள்ளார். ஆனால் அவர் நடிகையாக களமிறங்குவாரா அல்லது திரைத்துறை வணிகத்தை தேர்வு செய்வாரா என்பது தெரியவில்லை. ஆனால் நிறையை ஷார்ட் ஃபிலிம்களில் நடித்து வருகிறார். விரைவில் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுப்பார் எனவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் தற்போது பதான் படத்தில் நடித்து வருகிறார்.இதில் தீபிகா படுகோன் , ஆப்ரகாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இது தவிர அட்லீ இயக்கும் புது படத்திலும் ஷாருக்கான் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது.