Tomato Memes | ஹாய் கூகுள்! தக்காளி இல்லாம சமைக்குறது எப்படி ? - வைரலாகும் தக்காளி மீம்ஸ்!
எந்த வேதனையையும், சோதனையையும் கூலாக அணுகும் மீம் கிரியேட்டர்ஸ் தக்காளி விலை குறித்தான மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாடு , கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஆந்திராவில் இருந்து அதிகப்படியாக இறக்குமதி செய்யப்படும் தக்காளி வரத்து முடங்கியுள்ளதால் தமிழகம் , கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளியின் விலை தாறுமாறாக எகிறியுள்ளது. சென்னையின் முக்கிய சந்தையான கோயம்பேடு மார்கெட்டியில் தற்போது தக்காளியின் விலை ஒரு கிலோ 150 ரூபாயை தாண்டி விற்பனையாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க எந்த வேதனையையும் சோதனையையும் கூலாக அணுகும் மீம் கிரியேட்டர்ஸ் தக்காளி விலை குறித்தான மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல தேடு பொறியான கூகுளில் தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி ? தக்காளி இல்லாமல் சட்னி செய்வது எப்படி என பலரும் தேடி வருவதாக ஷேர் செய்து வருகின்றனர். இது தக்காளி ஒவ்வாமை பிரச்சனைகள் இருப்பவர்களால் எல்லா காலங்களிலும் இப்படி தேடப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் , தற்போது சரியான டைமிங்கில் பகிர்வதுதான் சுவாரஸ்யம். இது போன்ற மேலும் சில மீம்ஸ்கள் கீழே
#Tomato #tomatoprice #MEMES #meme #Vegiee #vegetables #India #TamilNadu #Chennai #Subash pic.twitter.com/CBFvplTiAk
— Sudharsan (@SudharsanSubash) November 23, 2021
#TamilNadu #Chennai #Tomato #tomatoprice #takali #MEMES #memesdaily pic.twitter.com/EcuohZBAxM
— Biju Varghese (@BijuCSKManU) November 22, 2021
#Tomato #tomatoprice #MEMES #meme #Vegiee #vegetables #India #TamilNadu #Chennai #Subash pic.twitter.com/9lQMOOo9c8
— Sudharsan (@SudharsanSubash) November 23, 2021
#tomatoprice pic.twitter.com/W3xP4570bp
— சாமானியன் (@Samaniyen) November 23, 2021
#tomatoprice 😒 pic.twitter.com/pUIUj9guBg
— ஹாசன் ரமேஷ் (@HassanRamesh1) November 23, 2021
🤨#PetrolDieselPriceHike #Tomatoprice pic.twitter.com/AifjiSSaaX
— Reegan JNR (@Reeganjnr) November 22, 2021
#tomatoprice 😂😂😂 pic.twitter.com/tZV3FwQKoe
— பாமரன் கருத்து (@pamarankaruthu) November 22, 2021