HBD Tom Hanks: வீக்கெண்ட் ப்ளானுக்கான கோல்டன் மூவிஸ்... இது டாம் ஹான்க்ஸ் லிஸ்ட்!
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஹாலிவுட்டில் நடித்து வரும் டாம், உலக ஃபேமஸ். ஃபிலடெல்ஃபியா, ஃபாரஸ்ட் கம்ப் என அவர் நடித்த இரண்டு படங்களுக்கு அடுத்தடுத்து ஆஸ்கர் விருது பெற்றவர்.
’ரன் ஃபாரஸ்ட் ரன்’ – ஃபாரஸ்ட் கம்ப் படத்தை பார்த்திருப்பவர்களுக்கு, டாம் ஹான்க்ஸை பார்க்கும்போதெல்லாம் இந்த வசனம் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இன்னும் பார்க்கவில்லை என்றால், இந்த வீக்கெண்ட் பார்த்துவிடுங்கள். அட்டகாசமான திரைப்படம். சரி, ஃபாரஸ்ட் கம்ப் படம் பற்றி இன்று நினைவிற்கு வர காரணம், இன்று டாம் ஹான்க்ஸ் பிறந்தநாள்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஹாலிவுட்டில் நடித்து வரும் டாம், உலக ஃபேமஸ். ஃபிலடெல்ஃபியா, ஃபாரஸ்ட் கம்ப் என அவர் நடித்த இரண்டு படங்களுக்கு அடுத்தடுத்து ஆஸ்கர் விருது பெற்றவர். ஆஸ்கர் மட்டுமின்றி, எம்மி, கோல்டக் க்ளோப் என உலகின் பிரபல விருதுகளையும் டாம் பெற்றுள்ளார். 65-வது பிறந்தநாளை கொண்டாடும் டாமின் சில ‘மஸ்ட் வாட்ச்’ திரைப்படங்களில் லிஸ்ட் இதோ.
1. அப்போலோ 13 (1995)
1995-ம் ஆண்டு ரான் ஹாவர்ட் இயக்கத்தில் உருவான அப்போலோ 13 திரைப்படத்தில் கமாண்டர் ஜிம் லோவெல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஸ்பேஸ் த்ரில்லரான இந்த திரைப்படம் டாம் ஹான்க்ஸ் நடித்த படங்களில் இதுவும் ஒரு முக்கியமான படம். அப்போலோ 13 திரைப்படத்தை பார்க்க விரும்புவர்கள், நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
2. டாய் ஸ்டோரி
1995, 1997, 2010 மற்றும் 2019 வருடங்களில், இதுவரை டாய் ஸ்டோரி திரைப்படத்தின் 4 பாகங்கள் வெளியாகியுள்ளன. இதில், கவ் பாய் வுட்டி கதாப்பாத்திரத்திற்கு பின்னணி குரல் பேசியவர் டாம் ஹான்க்ஸ். குழந்தைகள் விரும்பி பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், சூப்பர் எண்டெர்டெயினர். இந்த திரைப்படங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் உள்ளது.
3. ஃபாரஸ்ட் கம்ப் (1994)
ஃபாரஸ்ட் கம்ப் நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படம், டாம் ஹான்க்ஸின் அட்டகசாமன நடிப்பை வெளிகாட்டியிருக்கும். அமெரிக்காவில், 20-ம் நூற்றாண்டில் நடைபெறும் விதமாக படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் வரும் வசனங்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். ஃபாரஸ்ட் கம்ப் என்ற கதாப்பாத்திரத்தை சுற்றி நடக்கும் சம்பவங்களை மிக எதார்த்தமாக படமாக்கியிருப்பார்கள். நேரம் கிடைத்தால், தவறாமல் பார்த்துவிடவும். நெட்ப்ளிக்ஸ் தளத்தில் இந்த திரைப்படம் உள்ளது.
4. ஃபிலடெல்ஃபியா (1993)
1993-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம், டாம் ஹான்க்ஸிற்கு அவரது முதல் ஆஸ்கர் விருதை பெற்று தந்தது. எச்.ஐ.வி எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர், தனது உரிமைகளுக்காக போராடும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் டாம். அவரது நடிப்புத் திறமைக்கு தீனி போட்ட இந்த திரைப்படம், அமெரிக்கன் மெயின் ஸ்ட்ரீம் படங்களில் கவனிக்க வைத்த முக்கிய படங்களுள் ஒன்று.
5. கேஸ்ட் அவே (2000)
சர்வைவல் டிராமா திரைப்படங்களின் பட்டியலில், கேஸ்ட் அவே திரைப்படத்திற்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. ஊர் பெயர் தெரியாத தீவில் மாட்டிக்கொள்ளும் டாம், அங்கிருந்து தப்பி பிழைக்க, உயிர் வாழ மேற்கொள்ளும் முயற்சிகளை பற்றிதான் காஸ்ட் அவே படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.