மேலும் அறிய

Actor Karthi: "நானும் பெருமாள் பக்தன்தான்" பவன் கல்யாணிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி!

Actor Karthi on Tirupati Laddu: லட்டு பற்றிய கருத்திற்கு ஆந்திர துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரியுள்ளார்.

நடிகர் கார்த்திக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் அவரது படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல தெலுங்கிலும் அவரது படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதையடுத்து, மெய்யழகன் படத்தின் தெலுங்கு வெளியீட்டிற்கான விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பங்கேற்றார்.

லட்டு பற்றி பேசிய கார்த்தி:

தற்போது ஆந்திரா முழுவதும் புகழ்பெற்ற திருப்பதி கோயிலின் பிரசாதமான லட்டு வழங்கப்படுகிறது, இந்த நிலையில், லட்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றி கொழுப்பு கலக்கப்பட்ட குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த சூழலில், நடிகர் கார்த்தியின் மெய்யழகன் தெலுங்கு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அவரிடம் சிறுத்தை படத்தில் இடம்பெற்ற லட்டு நகைச்சுவை காட்சியை காட்டி லட்டு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் கார்த்தி அது ஒரு சென்சிட்டிவான விவகாரம் அது. எனக்கு அது வேண்டாம். லட்டே வேண்டாம் என்றார். அவரது பேச்சுக்கு அங்கிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து சிரித்தனர்.

ஆவேசப்பட்ட பவன் கல்யாண்:

அவரது பேச்சு குறித்து ஆந்திர துணை முதலமைச்சரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, லட்டை வைத்து நகைச்சுவை செய்கிறார்கள். திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கூட பேசினார்கள். லட்டு சென்சிட்டிவான விஷயம் என்று கூறியுள்ளார். ஒருபோதும் அப்படி கூறாதீர்கள். எப்போதும் அப்படி பேசக்கூட முயற்சிக்காதீர்கள். ஒரு நடிகராக உங்களை மதிக்கிறேன். ஆனால், சனாதன தர்மம் என்று வரும்போது ஒரு வார்த்தையை கூறும் முன்பு 100 முறை யோசிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்ட கார்த்தி:

பவன் கல்யாண் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக, கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, பவன்கல்யாண் ஐயா, உங்களுக்கு ஆழ்ந்த மரியாதையுடன், எதிர்பாராத தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை அன்புடன் பின்பற்றுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாணுக்கு அவரது அண்ணன் சிரஞ்சீவி அளவிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் தெலுங்கு திரையுலகில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மெய்யழகன் படம் வெளியாக உள்ள நிலையில் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரியுள்ளார்.

தீவிர விசாரணையில் ஆந்திர அரசு:

லட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஆந்திர அரசு அதுதொடர்பாக விசாரிக்க சிறப்பு குழுவை நியமித்துள்ளது. மேலும், ஆந்திர துணை முதலமைச்சரான பவன் கல்யாண் 11 நாட்கள் விரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்து விரதம் இருந்து வருகிறார். இந்தியாவின் பணக்கார கோயிலான திருப்பதிக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஏற்படுத்தியுள்ளது. மேலும், திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனத்திற்கு மத்திய உணவு தர நிர்ணய அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்... போட்டுடைத்த முன்னாள் எம்எல்ஏ குமரகுரு
இதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்... போட்டுடைத்த முன்னாள் எம்எல்ஏ குமரகுரு
Breaking News LIVE, Sep 24: உடல்நிலையில் முன்னேற்றம் - சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் துரை தயாநிதி
Breaking News LIVE, Sep 24: உடல்நிலையில் முன்னேற்றம் - சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் துரை தயாநிதி
TNPSC Group 2 Answer Key: டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு; செப்.30 வரை முறையீடு செய்யலாம்- எப்படி?
TNPSC Group 2 Answer Key: டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு; செப்.30 வரை முறையீடு செய்யலாம்- எப்படி?
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: ஒரு வழியாக உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: ஒரு வழியாக உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tobacco in Tirupati Laddu | ”திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட், சிக்ரெட்” மீண்டும் வெடித்த சர்ச்சைTirupati Devasthanams | புனிதத்தை மீட்க  திருப்பதி தேவஸ்தானம் செய்த செயல்Rahul Gandhi : ”நான் தப்பா பேசுனேனா..என்னை தடுக்க முடியாது” ராகுல் ஆவேசம்Aadhav Arjuna on deputy cm : ”உதய் துணை முதல்வரா? திருமா-வ போடுங்க” கொளுத்திப்போட்ட ஆதவ் அர்ஜூனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்... போட்டுடைத்த முன்னாள் எம்எல்ஏ குமரகுரு
இதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்... போட்டுடைத்த முன்னாள் எம்எல்ஏ குமரகுரு
Breaking News LIVE, Sep 24: உடல்நிலையில் முன்னேற்றம் - சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் துரை தயாநிதி
Breaking News LIVE, Sep 24: உடல்நிலையில் முன்னேற்றம் - சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் துரை தயாநிதி
TNPSC Group 2 Answer Key: டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு; செப்.30 வரை முறையீடு செய்யலாம்- எப்படி?
TNPSC Group 2 Answer Key: டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு; செப்.30 வரை முறையீடு செய்யலாம்- எப்படி?
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: ஒரு வழியாக உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: ஒரு வழியாக உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் யார்? டாப்பில் இருக்கும் இந்திய வீரர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் யார்? டாப்பில் இருக்கும் இந்திய வீரர்
Pudukottai Leopard: புதுக்கோட்டை மக்கள் கவனத்திற்கு..! சிறுத்தை நடமாட்டமா? வனத்துறை தந்த விளக்கம்
Pudukottai Leopard: புதுக்கோட்டை மக்கள் கவனத்திற்கு..! சிறுத்தை நடமாட்டமா? வனத்துறை தந்த விளக்கம்
Vijay TV Pugazh : அந்த சிரிப்ப பாருங்க... ரஜினிகாந்தை நேரில் சந்தித்த விஜய் டிவி புகழ்...வைரலாகும் புகைப்படங்கள்
Vijay TV Pugazh : அந்த சிரிப்ப பாருங்க... ரஜினிகாந்தை நேரில் சந்தித்த விஜய் டிவி புகழ்...வைரலாகும் புகைப்படங்கள்
Gold Silver Price: ஜெட் வேகத்தில் உயர்வு! தங்கம் விலை ரூ.56 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்!
Gold Silver Price: ஜெட் வேகத்தில் உயர்வு! தங்கம் விலை ரூ.56 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்!
Embed widget