Cinema Round-up : எங்கும் விஜய் எதிலும் அஜித்.. ரஹ்மானின் கற்றார்.. இன்றைய சினிமா செய்திகள் இங்கே!
Cinema Round-up : வரும் ஜனவரி 11 ஆம் தேதியன்று , வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இதையொட்டி மக்கள் அனைவரும் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
துணிவு படத்தின் முதல் காட்சி
துணிவு படத்திற்காக வரும் 11-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்படப்படும் என்று படத்தின் இயக்குநர் எச்.வினோத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைதொடர்ந்து, அதிகாலை 4 மணிக்கும் சிறப்பு காட்சி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு தான் முதல் சிறப்பு காட்சியே திரையிடப்படும் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் துணிவு திரைப்படம் கூடுதல் காட்சிகள் திரையிடப்படுவதால், முதல் நாள் வசூலில் வாரிசு திரைப்படத்தை துணிவு திரைப்படம் எளிதில் முந்திவிடும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமந்தாவின் இன்ஸ்டா பதிவு
காளிதாஸ்’ எழுதிய புராணக்கதையான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார் சமந்தா. ’சூஃபியும் சுஜாதையும்’ படத்தில் நடித்து கவனமீர்த்த தேவ் மோகன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநரான குணசேகரன் படத்தை இயக்கியுள்ளார்.
View this post on Instagram
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் பிப்.17ஆம் தேதி ரிலீசாக உள்ளது.இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகளில் தான் முழுவீச்சில் ஈடுபடும் புகைப்படத்தை முன்னதாக சமந்தா பகிர்ந்துள்ளார். "இந்த பைத்தியக்காரத்தனம், துக்கம், இழப்பு என அனைத்துக்கும் கலை தான் சிகிச்சை. அதன் மூலம் நான் குணம்பெற்று வீட்டுக்கு செல்வேன்” எனப் பதிவிட்டுள்ளார் சமந்தா.
ரஹ்மானின் டிஜிட்டல் இசை தளம்
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ’கற்றார்’ எனும் புதிய டிஜிட்டல் தளத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் முன்னதாகத் அறிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாளில் “கற்றார்” எனும் புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் அறிமுகம்!https://t.co/wupaoCzH82 | #ARRahman #HBDARR #HBDARRahman #KATRAAR pic.twitter.com/CIMcGo0BSo
— ABP Nadu (@abpnadu) January 6, 2023
"இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும். இத்தளத்தின் புதிய கலைஞர்கள், புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கவும், கலைஞர்கள் தங்கள் படைப்புகளுக்கான நேரடி வருமானத்தைப் பெறவும் வழிவகுக்கும்” எனவும் முன்னதாக ரஹ்மான் இது குறித்துப் பேசியுள்ளார்.
வாரிசு முன்பதிவு
வாரிசு படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஆனால் தமிழகம் முழுவதும் நாளை (ஜனவரி 7) அல்லது ஜனவரி 8 ஆம் தேதி தான் முன்பதிவு தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில், தென் மாவட்டமான தூத்துக்குடியில் உள்ள தியேட்டர்கள் முன்பதிவு தொடங்கியுள்ளது.
View this post on Instagram
ரூ.200, ரூ.250 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், விறுவிறுப்பாக முன்பதிவு நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு 7 காட்சிகள் வரை திரையிடப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
BAFTA விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆர்.ஆர்.ஆர்
550 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலி இயக்கத்தில், டோலிவுட்டின் டாப் ஸ்டார்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியானது ஆர்.ஆர்.ஆர் படம். உலகம் முழுவதும் 1200 கோடி வசூலை வாரி சுருட்டி பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக இப்படம் உருவெடுத்தது.
The wait is over! Check out the longlist for the 2023 #EEBAFTAs 👇
— BAFTA (@BAFTA) January 6, 2023
Who would you like to see nominated on Thursday 19th January?
திரைத்துறையில் ஆஸ்கார் விருதுகளுக்கு இணையான, உயரிய விருதுகளில் ஒன்றாக பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் எனப்படும் பாஃப்டா (BAFTA) விருதுகள் கருதப்படுகின்றன. இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான பாஃப்டா விருதுகளுக்கான முதல்நிலை தேர்வுப் பட்டியலில் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பரிந்துரையாகி கவனமீர்த்துள்ளது.