மேலும் அறிய

Director Tharun Gopi: காகிதங்களில் கரையும் கதைகள்.. ‘திமிரு’ பட இயக்குநர் தருண் கோபியின் திரைப் போராட்டம்!

திமிரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியவர் இயக்குநர் தருண் கோபி. தன்னுடைய 17 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் பல்வேறு போராட்டாங்களைக் கடந்து வந்திருக்கிறார்.

தருண் கோபி

விஷால் நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான 'திமிரு' படத்தை இயக்கியவர் தருண் கோபி. தன்னுடைய முதல் படத்திலேயே அந்த ஆண்டின் மிகப்பெரிய கமர்ஷியல் படத்தை கொடுத்த தருண் கோபி அடுத்தபடியாக மாதவனுடன் தன்னுடைய இரண்டாவது படத்திற்கான வேலைகளில் இறங்கினார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்தப் படத்தின் கதை காகிதங்களில் காலம் கழித்தது.

காளை

இதனைத் தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படமாக சிலம்பரசன் வேதிகா நடித்த காளை படத்தை இயக்கினார். திமிரு படத்தின் வெற்றியுடன் ஒப்பிட்டால் காளை படம் மிகச் சுமாரான வெற்றிபெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் சிம்புவுக்கும் தருண் கோபிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து சிலம்பரசன் நடித்து வந்த கெட்டவன் படத்தில் வில்லனாகவும் நடிக்க இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். சிம்புக்கு அவர் வில்லனாவதை விதி விரும்பவில்லையோ என்னவோ இந்தப் படமும் வெளிவராமல் போனது.

தொடர் ஏமாற்றங்களை சந்தித்த தருண் கோபி பிரபாஸ் , லேகா வாஷிங்டன் நடிப்பில் “நீ ஓட நான் துரத்த” என்கிற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்க இருந்தார். கனவுகள் நிஜமாக சிலர் எவ்வளவு போராடினாலும் அது சாத்தியப்படுவதில்லை. இந்தப் படம் நிறைவுபெறாமல் போனது.

தோல்வியில் முடிந்த முயற்சிகள்

தன்னுடைய அடுத்த முயற்சியாக சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி காட்டுப்பையா என்கிற படத்தை இயக்கி அதில் நடிக்க இருந்தார். ரீமா சென் இந்தப் படத்தில் கதாநாயகியாக விருப்பப் பட்ட அவரது இந்த ஆசையும் நிறைவடையவில்லை.

நடிகராக அவதாரம்

தொடர் முயற்சிகள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தருண் கோபி ஒரு நல்ல நடிகர் என்பதை மாயாண்டிக் குடும்பத்தார் படத்தில் மக்கள் தெரிந்துகொண்டார்கள். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் வெற்றிபெற்ற படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்யவிருந்த அவரது இன்னொரு முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

ஜீவா பூங்கா, என்னை ஏதோ செய்துவிட்டாய், ஞானி, சரவணக் குடில், பச்சையக்கா மருமகன், கன்னியும் காளையும் செம காதல் உள்ளிட்ட அவர் நடித்த படங்கள் நிலுவையில் நின்றன. இதுதொடர்பாக தனது மனவருத்தத்தையும் தெரிவித்தார். மேலும் இனி தான் நடிப்பதைவிட படங்களை இயக்குவதில் அதிக கவனம் செலுத்தப் போவதாகவும் அறிவித்தார். சமீபத்தில் ஆர்யா நடித்து வெளியான காதர் பாட்சா படத்தில் தருண் கோபி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget