Watch Video: எப்பா... உசுரு முக்கியம்! திருடவந்த இடத்தில் வசமாக சிக்கிய அணில்!! வைரல் வீடியோ!!
இதற்கு காரணம் அணில் உந்து சக்தி விதியை பின்பற்றாமல் ஏனோ தானோ என்று குதித்ததுதான் என்று இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
விலங்குகளின் சேட்டை வீடியோவுக்கு இணையத்தில் எப்போதும் வரவேற்பு இருக்கும். கார்டூன் சேனல்களில் ஓடும் பூனை மற்றும் எலியின் சேட்டைகளையும் அதன் சண்டைகளையும் பார்த்து ரசித்த 90ஸ் கிட்ஸ் ரியலாக அவ்வாறு நடைபெற்றால் ரசிக்காமல் விட்டுவிடுவார்களா… அணிலைப் பொறுத்தவரை அடிக்கடி பார்ப்பவர்களுக்கு தெரியும் அதனுடைய சேட்டை. நாய் பூனைக்கு பிறகு மனிதர்களோடு கொஞ்சம் அதிகம் ஒன்றும் கால் நடை அல்லாத மிருகம் என்றால் அது அணில்தான். இன்னும் சொல்லப்போனால், அணிலால் மனிதர்களுக்கு எந்த பாதிப்புமில்லை என்பதால் மக்கள் பெரிதும் விரும்பும் விலங்கு அணில். காட்டுப்புறங்களில் மெதுவாக தத்தி தத்தி செல்லும் அணில், பாதி மரத்தில் நின்று கொண்டு விசில் அடிப்பது, பறவைகள் இருந்தால் அதனுடன் விளையாடுவது, இப்படியான சேட்டைகள் செய்யும் அணில் வீடு ஒன்றில் புகுந்து செய்யும் சேட்டை தான் இணைய வாசிகளை வெகுவாக கவர்ந்து இணையத்திலும் வைரலாகியுள்ளது.
தற்போது வைரலாகியிருக்கும் இந்த வீடியோவில், வீடு ஒன்றில் புகுந்து அங்கும் இங்கும் வேகமாக ஓடியோடி உலாவுகிறது. பின்னர், கார்டன் ஏரியாவுக்கு வரும் அணில் கம்பி ஒன்றில் பொருத்தப்பட்டிருக்கும் பறவைகளுக்கான உணவு கோப்பையை பார்க்கிறது. பின்னர் வேகமாக அந்த இரும்பு கம்பி மீது ஏறி தொங்கிக் கொண்டிருக்கும் பறவைகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தீனி பாக்ஸ் மீது தாவுகிறது. அடுத்த நொடியே அந்த தீனி பாக்ஸ் பம்பரம்போல் வேகமாக சுழலத் தொடங்குகிறது. கிறுகிறுவென அணில் சுழல்வதை, கண்ட அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்துகிறது. திருடச் சென்ற இடத்தில் வசமாக சிக்கிக் கொண்ட அணிலால் அந்த தீனி கோப்பையின் சுழற்சியை நிறுத்தவும் முடியாமல், அதிலிருந்து தப்பிக்கவும் முடியாமல் தவிக்கும் விடியோ அணைவரையும் ரசிக்க வைக்கிறது. புலிவாலை பிடித்த கணக்காக அந்த கோப்பை வேகமாக சுழலுவதற்கு ஏற்ப சுழன்றுகொண்டே இருக்கிறது.
Today's physics lesson for squirrels trying to steal from the bird-feeder: conservation of momentum. pic.twitter.com/dyKB24Qt4L
— Science & Nature (@Sci_Nature0) March 30, 2022
இதற்கு காரணம் அணில் உந்து சக்தி விதியை பின்பற்றாமல் ஏனோ தானோ என்று குதித்ததுதான் என்று இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இந்த நகைச்சுவையான பதிவானது சைன்ஸ் ஆண்டு நேச்சர் என்னும் ட்விட்டர் பக்கத்தில் பகிறப்பட்டுள்ளது. அந்த பதிவில், அணில்களுக்கு இன்றைய பாடம், பறவைகளின் உணவை திருட முயற்சிக்கயில், உந்து சக்தி விதியை அறிந்திருக்க வேண்டும் என்று எழுதி இருக்கின்றனர். டிவிட்டரில் மட்டும் இதுவரை 7லட்சம் பார்வைகளை நெருங்கியுள்ளது. நான்காயிரத்திற்கும் மேல் ரீட்வீட்களையும், 18 ஆயிரத்திற்கும் மேல் லக்ஸ் பெற்று வைரலாகி வருகுறது. நெட்டிசன்கள் நகைச்சுவை கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.