The GOAT First Review: விஜய் - வெங்கட் பிரபுவின் சம்பவம் லோடிங்... UK சென்சார் போர்டு வெளியிட்ட முதல் விமர்சனம்...
The GOAT First Review in Tamil: நடிகர் விஜய்யின் 'தி கோட்' திரைப்படத்தின் பிரீமியர் காட்சியை பார்த்த UK சென்சார் போர்டு 15 ரேட்டிங் பெற்றுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் 'தி கோட்'. விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த கம்ப்ளீட் ஆக்ஷன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி, வைபவ், அஜ்மல், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விஜய்யின் டிஏஜிங் காட்சிகள் மக்களின் வரவேற்பை பெற்றது.
படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே இருப்பதால் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'தி கோட்' படத்திற்கான UK சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. அந்த தகவலை தயாரிப்பாளர் குழு வெளியிட்டு விஜய் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது.
விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படம் UK எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் UK பிரீமியர் காட்சியில் $500K வரை வசூலித்து '15' ரேட்டிங் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் நடிகர் விஜய்யின் படங்களில் அதிகம் வசூலித்த படமாக அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிலும் 3 மணிநேர திரையிடலுக்கு U/A சான்றிதழ் பெற்றுள்ளது.