மேலும் அறிய

The Family Man 2: வேறலெவல் சமந்தா.. தமிழகத்தில் சத்தமில்லாத பேமிலி மேன் 2 - சோஷியல் மீடியா பார்வை என்ன?

தமிழர்கள் பிரச்னை தொடர்பான விவாதங்களை கவனிப்போம் என்பதைத் தாண்டி சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்படுகிறது.

ட்விட்டர், பேஸ்புக் எங்கும் சமந்தாவின் பெயர்தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. காரணம், பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் . வெளியாவதற்கு முன்பில் இருந்து சமந்தாவிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் ஹேஸ்டேக்குகள் பதிவிடப்பட்டன. சீரிஸுக்கு எதிராகவும் தமிழகத்தில் குரல்கள் கிளம்பின. ட்ரெய்லரில் சமந்தா போராளியாக நடித்து இருப்பதும் அவர் விடுதலை புலிகள் சீருடை போன்ற ஒரு சீருடையை அணிந்திருப்பதும் பெரும் விவாதத்தை கிளப்பின. அதில் இடம்பெற்ற சில வசனங்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால் தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்ய வேண்டுமென அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் கருத்து பதிவிட்டனர். ஆனால் இயக்குநரோ, நாங்கள் தமிழ் மக்கள் மீது மரியாதை வைத்துள்ளோம். படத்தின் பணியாற்றிய பலரும் தமிழர்கள் தான். ட்ரெய்லரை வைத்துக்கொண்டு முடிவெடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். 


The Family Man 2: வேறலெவல் சமந்தா.. தமிழகத்தில் சத்தமில்லாத பேமிலி மேன் 2 - சோஷியல் மீடியா பார்வை என்ன?

குறிப்பாக படத்தின் நாயகியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகையுமான சமந்தா இது குறித்து வாய்திறக்கவே இல்லை. படம் வெளியாகட்டும் என அவர் காத்திருப்பதாக தகவல்கள் கசிந்தன.  ஏதேதோ பரபரப்புகளுக்கு இடையே பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் நேற்று இரவே வெளியானது. ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் பேமிலி மேன் 2 இடம்பிடித்தது. அதே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவில்லை. ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேமிலி மேன் 2 வெளியானது. 

விண்ணிலே பாதையில்லை உன்னை தொட ஏணியில்லை’ மறக்கமுடியாத ஹிட் லிஸ்ட் இதோ!

சென்னையில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.  இந்த வெப் சீரிஸ்  மொத்தம் 9 எபிசோட்களாக வெளியாகி உள்ளது. இந்த சீரிசில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் நடித்த்துள்ளனர். ராஜ் மற்றும் டிகே இணை இந்தத் தொடரை இயக்கியிருந்தனர். பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே பேமிலி மேன் வெளியானாலும் தமிழில் வெளியாகவில்லை. ஆனாலும் வெப் சீரிஸ் குறித்து தமிழக ட்விட்டர் பக்கங்கள் பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


The Family Man 2: வேறலெவல் சமந்தா.. தமிழகத்தில் சத்தமில்லாத பேமிலி மேன் 2 - சோஷியல் மீடியா பார்வை என்ன?

குறிப்பாக தமிழர்கள் பிரச்னை தொடர்பான விவாதங்களை கவனிப்போம் என்பதைத் தாண்டி சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழு நடிப்பை சமந்தா கொடுத்திருப்பதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக தன் உரிமைக்காகவும்,  தாய் நிலத்துக்காகவும் சமந்தா பேசும் வசனங்கள் மயிர்க்கூச்செரியும் காட்சிகள் என சிலர் பதிவிட்டுள்ளனர். க்யூட் பெண்ணாக நாம் பார்த்து பழகிய சமந்தா, இந்த சீரிஸில் அதகளம் செய்திருப்பதாகவும், வேறு ஒரு சமந்தாவை இந்த சீரிஸ் கொண்டு வந்து இருப்பதாகவும் கைதட்டுகின்றனர் ட்விட்டர் வாசிகள். 


The Family Man 2: வேறலெவல் சமந்தா.. தமிழகத்தில் சத்தமில்லாத பேமிலி மேன் 2 - சோஷியல் மீடியா பார்வை என்ன?

ட்ரைலரால் ஏற்கெனவே சர்ச்சைக்கு உள்ளான நிலையில் படம் வெளியாகியும் தமிழகத்தில் பெரும் புகைச்சல் ஏதுமில்லை. அதற்கு தமிழில் வெளியாகாதது ஒரு காரணமாக கூறப்பட்டாலும் ட்ரெய்லரில் தெரிந்த கண்ணோட்டம் படத்தில் இல்லையென சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். கலை வளர்க்கும் தமிழ்நாட்டில் கலைக்கு எதிராக குரல் கட்டாயம் எழாது என்பதும், அதேவேளையில் மண்ணும், மக்களும் திரித்து திரையில் வந்தால் கிளம்பும் கண்டனக்குரல்களை யாராலுமே தடுக்க முடியாது என்பதுமே நாடறிந்த நிதர்சனம். பேமிலி மேன் 2 தொடர் தற்போது வெளியாகி வடக்கே வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் வரவேற்பா அல்லது எதிர்ப்பா என்பதை அறிய சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

சில ட்விட்டர் பதிவுகள்:

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget