மேலும் அறிய

Thangalaan movie Update: விக்ரம் பிறந்தநாளில் ’தங்கலான் உலகம்’ பற்றிய அப்டேட்... குஷியில் சியான் ரசிகர்கள்!

விக்ரம் தன் பிறந்தநாளை வரும் ஏப்ரல் 17ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில், அன்று தங்கலானின் உலகம் பற்றிய அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷலாக தங்கலான் படக்குழு பகிர்ந்துள்ள அப்டேட் விக்ரம் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கலான் படக்குழு

பா.ரஞ்சித் உடன் முதன்முறையாக விக்ரம் இணைந்துள்ள தங்கலான் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. நடிகர் பசுபதி, நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கும் நிலையில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

மீண்டும் கேஜிஎஃப் கதைக்களம்!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் தங்க சுரங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் படம் மூலம் ஏற்கெனவே இந்தக் கதைக்களம் கவனம் ஈர்த்த நிலையில், இந்தக் களத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போது தங்கலான் படம் உருவாகி வருவது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் விக்ரமின் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக தங்கலான் படக்குழுவினர் சூப்பரான அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளனர்.

தங்கலானின் உலகம்

நடிகர் விக்ரம் தன் பிறந்தநாளை வரும் ஏப்ரல் 17ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில், அன்று தங்கலானின் உலகம் பற்றிய அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“தங்கலான் உலகில் இருந்து சக்தி வாய்ந்த ஒரு விஷயத்துக்கு தயாராகுங்கள்”  எனக்கூறி இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. 


Thangalaan movie Update: விக்ரம் பிறந்தநாளில் ’தங்கலான் உலகம்’ பற்றிய அப்டேட்... குஷியில் சியான் ரசிகர்கள்!

முன்னதாக தங்கலான் படப்பிடிப்பு ஏற்கெனவே நிறைவடைந்து விட்டதாகவும், இன்னும் 25 நாள்கள் படப்பிடிப்பு மட்டும் எஞ்சியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விக்ரம் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக வெளியாகியுள்ள  இந்தத் தகவல் நடிகர் விக்ரமின் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்தடுத்து மாஸ் காண்பிக்கும் விக்ரம்

சென்ற ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து விக்ரம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருந்த நிலையில்,  தற்போது அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும் இந்த மாதம் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில், இந்தப் படத்தையும் விக்ரம் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். மறுபுறம் தங்கலான் படக்குழுவினரும் விக்ரம் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தற்போது அப்டேட் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். 

மேலும் படிக்க: Actor Prashanth: பிரசாந்த் வீழ்ச்சிக்கு திருமணம்தான் காரணம்...ஆனா விஜய், அஜித்தைவிட ஓஹோனு இருக்கார்... ஜோடி பட இயக்குநர் பிரவீன் காந்தி பளிச்!

 April 14 New Release : இந்த தமிழ் புத்தாண்டில் வெளியாகும் புதிய தமிழ் படங்கள் என்னென்ன? ஆவலுடன் காத்திருக்கும் சினிமா பிரியர்கள்

 

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Embed widget