மேலும் அறிய
Actor vijay: தொடர்ந்து மக்களை நோக்கி நகரும் விஜய்..! மாஸ்டர் பிளான் போடுகிறாரா வாரிசு..?
இன்று பனையூரில் நடைபெற்ற விழாவில் விழியகம் என்ற பெயரில் மொபைல் செயலி வெளியிடப்பட்டது
வசூல் மன்னன் விஜய்
தமிழ்நாட்டில் முன்னணி நடிகராகவும், அதிக ரசிகர்களுக்கு கொண்ட நடிகராகவும் விஜய் இருந்து வருகிறார். விஜய் நடிக்கும் படங்கள் அதிகளவு வசூல்களை குவிக்கும் என்ற நம்பிக்கையில், தயாரிப்பாளர்களும் பெரும் பொருட்செலவில் விஜய் படங்களை தயாரிக்க முன்வருகின்றனர் . விஜய் படங்களும் அதிக வரவேற்புகளை பெற்று வருகிறது.
விஜய் மக்கள் இயக்கம்
நடிகர் விஜய் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில், நற்பணி மன்றத்தை நடத்தி வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தில் பல கிளை அமைப்புகளையும் உருவாக்கி உள்ளார். மகளிர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி, இளைஞரணி, வழக்கறிஞர் அணி என ஒரு அரசியல் கட்சிக்கு தேவையான அனைத்து அமைப்பு ரீதியாக தனது இயக்கத்தை வளர்த்து வருகிறார். தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஸ்சி ஆனந்த் இருந்து வருகிறார். அவ்வப்போது விஜய் ரசிகர்களை சந்தித்து, அவர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக முக்கிய நிர்வாகிகளை கூட விஜய் சந்திக்காமல் தவிர்த்து வந்தார். விஜய் மீண்டும் ரசிகர்களை சந்திக்க வேண்டும் என , விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கடந்த மாதம் முதல் மீண்டும் விஜய் , நிர்வாகிகளை சந்திக்க துவங்கியுள்ளார். இதுவரை கடந்த ஒரு மாதத்தில், இரண்டு முறை ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தியுள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் பணிகளில் கவனம்
தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மக்கள் பணிகள் செய்ய வேண்டும் எனவும் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் எடுக்கப்படும் முன்னேற்பாடுகளை சமூக வலைதளத்தில் கொண்டு சேர்ப்பதற்காக யூடியூப் சேனல் , அதிகாரப்பூர்வ ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்கள் மூலம் மக்களிடையே, விஜய் மக்கள் இயக்கம் தொடர்ந்து நேரடி தொடர்பில் இருந்து வருகிறது. இதுபோக தளபதி விஜய் குருதியாகும் என்ற பெயரில், ரத்த தேவைப்படுபவர்களுக்கு ரத்தம் அளிப்பதற்கு ஏதுவான மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோக, இன்று பனையூரில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தளபதி வழியாகும் என்ற பெயரில் ரத்த தானம் செய்வதற்கான மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
வாரிசு படம் வெளியீடு
விஜய் நடித்த வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் அந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அனுமதி பாஸ்களும் கொடுக்கப்பட உள்ளது. அந்தந்த மாவட்ட ரசிகர் மன்ற தலைமைக்கு இந்த பாஸ்கள் கொடுக்கப்பட்டு அவர்கள் மூலம் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion