Leo Movie Leaked: ‘டைட்டில் கார்டு முதல் கிளைமேக்ஸ் வரை’ .. லியோ படத்தை வீடியோ எடுத்து வெளியிட்ட ரசிகர்கள்..!
LEO Release: தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் லியோ படம் இன்று (அக்டோபர் 19) உலகமெங்கும் தியேட்டரில் வெளியானது.
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ(LEO) படம் இன்று வெளியான நிலையில் முதல் காட்சி பார்க்க சென்ற ரசிகர்கள் செய்த செயலால் இன்னும் படம் பார்க்காமல் இருக்கும் பலரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
மாஸ்டர் படத்துக்கு பிறகு நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி 2வது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளது. செவன் ஸ்கீரின் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் லியோ படம் இன்று (அக்டோபர் 19) உலகமெங்கும் தியேட்டரில் வெளியானது. இப்படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ள நிலையில், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர்,மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி என பல பிரபலங்களும் இணைந்துள்ளனர்.
There's a different vibe in audience as they're waiting for #Leo a 4 AM show 🔥🔥🥵🥵
— Rhidoy (@RhidoyRockstar) October 18, 2023
It's time for #LeoFilm , All the best for Leo Team and Vijay Fans from #SRKians ❤️ Can't wait 🥵#LokeshKanakaraj #ThalapathyVijay #LeoMovie #LeoReview #LeoFDFS #LeoFromTomorrow pic.twitter.com/mAB03pVvOj
இதனிடையே கடந்த ஒரு வார காலமாக லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது. தசரா, ஆயுத பூஜை விடுமுறை, வார விடுமுறை என தொடந்து அடுத்த 6 நாட்கள் விடுமுறை தினமாக இருப்பதால் கிட்டதட்ட ஒரு வாரத்திற்காக டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது. இப்படியான நிலையில் கேரளா மற்றும் கர்நாடகாவில் மட்டும் லியோ படம் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் மாநில அரசு மற்றும் உயர்நீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியும் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை.
#LeoMovie
— 𝚃𝙰𝙻𝚆𝙰𝙰𝚁_𝚅𝙸𝚂𝙷𝙽𝚄 (@VishnuPrabhass) October 18, 2023
#LeoFDFS #LokeshCinematicUniverse #LeoFilm #LeoReview #LeoFromTomorrow
Hynea 🤞 @actorvijay Anna pic.twitter.com/fhHqnG4a4V
இதனால் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் கேரளா மற்றும் கர்நாடகா எல்லையில் உள்ள விஜய் ரசிகர்கள் அருகிலுள்ள பக்கத்து மாநில ஊர்களுக்கு சென்று லியோ படத்தின் அதிகாலை காட்சியை கண்டு ரசித்தனர். குறிப்பாக நள்ளிரவு முதலே தியேட்டரில் ரசிகர்கள் குவிய தொடங்கினர். எங்கு திரும்பினாலும் லியோ படத்தின் போஸ்டர், பேனர், கட் அவுட்கள்,தோரணங்கள் என விடிய விடிய கொண்டாட்டங்களும் பஞ்சமில்லாமல் நடைபெற்றது.
இப்படியான நிலையில் லியோ படத்தை முதல் காட்சி பார்க்க சென்ற ரசிகர்கள் செய்த சிறப்பான சம்பவம், இன்னும் படம் பார்க்காதவர்களை கடுப்பில் ஆழ்த்தி விட்டது. ஆம். இப்படத்திற்காக புதிதாக டைட்டில் கார்டு தொடங்கி பல புதிய விஷயங்களை படக்குழு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக முதல் 10 நிமிடங்களை தவற விடக்கூடாது என லோகேஷ் சொல்லியிருந்தார். ஆனால் ரசிகர்கள் படத்தின் டைட்டில் தொடங்கி கிளைமேக்ஸ் வரை வீடியோ எடுத்து ஆர்வ மிகுதியில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எவ்வளவு சொல்லியும் இதுபோன்ற ரசிகர்கள் ஆர்வத்தில் செய்யும் சம்பவங்கள் படக்குழுவினருக்கு சோதனையாகவே அமைந்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.