Thalapathy Vijay: பொங்கலுக்கு வெளியாகும் விஜய் படம்.. வெளியான அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி!
ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீசாகி விடும் என ஜனவரி 5ம் தேதி முதல் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கினர். பேனர்,போஸ்டர், தோரணம், கட் அவுட் என தியேட்டர்களும் திருவிழா கோலம் பூண்டது.

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வெளியாகாத நிலையில், ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ஏமாற்றம் கொடுத்த பொங்கல்
2026 பொங்கல் பண்டிகையை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருந்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக அறியப்படும் விஜய் தனது சினிமா கேரியரின் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதி ரிலீசாவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நாசர், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன் என பலரும் நடித்திருந்தனர். ஜனநாயகன் படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. எனினும் அதிலிருந்து சில காட்சிகள் மட்டும் படத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் ஜனவரி 3ம் தேதி ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
எப்படியும் ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீசாகி விடும் என ஜனவரி 5ம் தேதி முதல் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கினர். பேனர், போஸ்டர், தோரணம், கட் அவுட் என அனைத்து தியேட்டர்களும் திருவிழா கோலம் பூண்ட தொடங்கிய நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் படம் கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் ஜனநாயகன் படம் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி 2வது வாரத்தில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் திரௌபதி 2 படம் பொங்கலுக்கு வெளியாகிறது. கார்த்தி நடித்த வா வாத்தியார் படத்தை வெளியிடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
ரசிகர்களை சமாதானப்படுத்தும் முயற்சி
இந்த நிலையில் சோகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக அவர் நடித்த பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மெர்சல், லியோ படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
விரைவில் திரையில்
— Kalaippuli S Thanu (@theVcreations) January 10, 2026
Thalapathy @actorvijay @Atlee_dir @gvprakash @Samanthaprabhu2 @iamAmyJackson #Theri pic.twitter.com/94h1hhI9fk
தற்போது விஜய் நடித்து அட்லி இயக்கிய தெறி படம் விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார். இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, மறைந்த இயக்குநர் மகேந்திரன் என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த படம் விஜய்க்கு பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. இந்த படம் பொங்கலுக்கு வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















