மேலும் அறிய

Thalapathy 67: ஏவிஎம் ஸ்டூடியோவில் பூஜை..பிரசாத் லேப்பில் ப்ரோமோ ஷூட்.. தொடங்கியது ‘தளபதி 67’ திருவிழா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் தற்போது இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில்  'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் நடிக்கவுள்ள 67வது படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் தற்போது இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில்  வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில்  நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கும் நிலையில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. பொங்கல் வெளியீடாக வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்க, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த நவம்பர் 5 ஆம் தேதி விஜய் பாடிய ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டான நிலையில், 2 ஆம் பாடலாக “தீ தளபதி” பாடல் நேற்று வெளியானது. நடிகர் சிலம்பரசன் குரலில் வெளியான பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதுவரை இப்பாடலை 80 லட்சம் பேர் பார்வையிட்டுள்ள நிலையில் தீ தளபதி பாடல் மேலும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பெரிதும் எதிர்பார்த்த விஜய்யின் 67வது பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இன்று ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் பிரசாத் லேப்பில் தளபதி 67 படத்தின் ப்ரோமோ ஷூட்டுக்காக இரண்டு செட்கள்  அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கேங்ஸ்டர் படம் என சொல்லப்படுவதால் 2 செட்களில் ஒன்று முழுக்க முழுக்க சிவப்பு நிறத்தில் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் நாளை முதல் 3 நாட்களுக்கு ப்ரோமோ ஷூட் நடைபெற்று படம் குறித்த அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு சென்னை மற்றும் காஷ்மீரில் நடக்கவுள்ள நிலையில் ஹீரோயினாக த்ரிஷா நடிப்பார் என முன்பே தகவல் வெளியாகியிருந்தது. சமீபத்தில் எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் என்ற ஆங்கில படத்தின் உரிமையை லோகேஷ் பெற்றிருந்தார் என்பதால் அப்படத்தின் தழுவலாக தளபதி 67 ஆக உருவாகவுள்ளதா அல்லது வேறு எதுவும் கதையா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Embed widget