மேலும் அறிய

Thalapathy 68: கப்பு முக்கியம் பிகிலு.. மீண்டும் விஜயுடன் இணையும் அட்லீ.. வெளியானது ‘தளபதி 68’ அறிவிப்பு!

நடிகர் விஜயின் 68 ஆவது படத்தின் இயக்குநர் குறித்தான தகவல் வெளியாகி இருக்கிறது;

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்கவைத்துக் கொண்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது மார்க்கெட்டும் ரசிகர் பட்டாளமும் இமய மலைக்கு ஒப்பானது. இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ' வாரிசு' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் வெகு தீவிரமாக நடந்தேறி வருகிறது.

இத்திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கிறது.'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. தமிழில் இயக்குனர் வம்சி நடிகர் கார்த்தியை வைத்து ' தோழா' திரைப்படத்தை இயக்கி தமிழ் மக்கள் மனதில் பரிட்சையமானார்.

விஜய் 'வாரிசு' திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விருக்கிறார்.இந்த திரைப்படம் குறித்தான அதிகாரப் பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் இதற்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ' மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது.

அதனை தொடர்ந்து அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையப்போகிறது; விக்ரம்' திரைப்படத்தின் அசுர வெற்றியால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 67' திரைப்படத்திற்கு எதிர்பார்பு  அதிகளவில் இருந்து வருகிறது.'தளபதி 67' திரைப்படமும் 'எல்.சி.யு' வில் இடம் பெறுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகளவில் இருந்து வருகிறது.'தளபதி 67' இல் விஜய் க்கு ஜோடியாக திரிஷா இணையவுள்ளதாக கூறப்படுகிறது.


                           Thalapathy 68: கப்பு முக்கியம் பிகிலு.. மீண்டும் விஜயுடன் இணையும் அட்லீ.. வெளியானது ‘தளபதி 68’ அறிவிப்பு!

இதற்கு ஒரு புறம் எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்து வரும் நிலையில்.'தளபதி 68' திரைப்படம் குறித்தான அறிவிப்பு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு விஜயை வைத்து 'தெறி,மெர்சல்,பிகில்' என மூன்று வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீயுடன் விஜய் மீண்டும் இணையப் போவதாக கூறப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தை ' சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இத்திரைப்படத்திற்கு விஜய்க்கு 150 கோடியும், இயக்குனர் அட்லீக்கு 50 கோடியும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.


                   Thalapathy 68: கப்பு முக்கியம் பிகிலு.. மீண்டும் விஜயுடன் இணையும் அட்லீ.. வெளியானது ‘தளபதி 68’ அறிவிப்பு!

இயக்குனர் அட்லீ 'ராஜா ராணி' எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனது முத்திரையை பதித்தார்.இவர் தற்போது ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் ' ஜவான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இதில் விஜய் சேதுபதி,நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்;

அண்மையில் அட்லி ப்ரியா தம்பதி தங்களது எட்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தாங்கள் பெற்றோராக போகும் செய்தியை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தனர். அந்த பதிவில், “எங்களது குடும்பம் வளர்ச்சி அடைகிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆம் ! நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம். இந்த அழகான பயணம் முழுக்க  உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு வேண்டும். அன்புடன் அட்லீ, பிரியா மற்றும் பெக்கி'', என தங்களது செல்ல நாய்க்குட்டியுடன் அட்லீ பிரியா தம்பதி இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். அட்லீ- ப்ரியா வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தினார்.

 

 

 

தலைப்பு செய்திகள்

Mysskin:
Mysskin: "ட்ரெயின் படம் நல்லா இல்லனா செருப்பை கழட்டி அடிங்க.." இயக்குனர் மிஷ்கின்!
மிஷ்கினை ஒரு ராத்திரி முழுக்க ரசிச்சேன்.. மேடையிலே புகழ்ந்த இயக்குனர் அமீர்!
மிஷ்கினை ஒரு ராத்திரி முழுக்க ரசிச்சேன்.. மேடையிலே புகழ்ந்த இயக்குனர் அமீர்!
Actress Swasika: நகையெல்லாம் வாங்கி ஏமாத்திட்டாங்க.. நடிக்க வந்த புதிதில் ஸ்வாசிகாவிடம் கைவரிசை!
Actress Swasika: நகையெல்லாம் வாங்கி ஏமாத்திட்டாங்க.. நடிக்க வந்த புதிதில் ஸ்வாசிகாவிடம் கைவரிசை!
Jana Nayagan Trailer: ரிலீஸ் தேதியை குறித்த விஜய்.. புது ட்ரெய்லரோடு வரும் ஜனநாயகன்.. ரசிகர்கள் ஹேப்பி!
Jana Nayagan Trailer: ரிலீஸ் தேதியை குறித்த விஜய்.. புது ட்ரெய்லரோடு வரும் ஜனநாயகன்.. ரசிகர்கள் ஹேப்பி!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Embed widget