மேலும் அறிய

Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?

’லயோலா மணி நியமனத்திற்கு மட்டமான விமர்சனங்களை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் முன் வைக்கிறார்கள் என்றால் அதற்கு தகுதி மட்டுமே காரணமா? அல்லது தங்களுக்கெல்லாம் இப்படியான பதவி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமா?

தவெக நிர்வாகி லயோலா மணியை அரசு பாடநூல் கழகத் தலைவராக நியமித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அவர் மீது சமூக வலைதளங்களில் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

தவெக-விற்கு உழைத்த லயோலா மணி

தவெக ஆட்சி அமைவதற்கு உழைத்தவர்களில் முக்கிய பங்கு லயோலா மணிக்கு உண்டு. ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஏன் களத்திலும் லயோலா மணி ஆற்றிய பணி மறுக்கவோ மறைக்கவோ முடியாதது. தவெக-வில் பெயர் தெரியாதவர்கள் பலருக்கு எம்.எல்.ஏ சீட், வெற்றி பெற்றதும் அமைச்சர் என்ற அந்தஸ்தை அந்த கட்சியின் தலைவர் விஜய் கொடுத்திருக்கும் நிலையில், யார், யாருக்கோ எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய், பல விவாதங்களில் பங்கேற்று தவெக-வை முன்னிறுத்திய லயோலா மணிக்கு ஏன் எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை என்ற கேள்வி அப்போதே எழுந்திருந்தது.

கு.ப.கிருஷ்ணன் முதல் வெங்கட்நாராயணா வரை

ஆட்சி அமைந்ததும் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த கு.ப.கிருஷ்ணனுக்கு வீட்டு வசதி வாரியத் தலைவர், தன்னுடைய ஜோதிடருக்கு OSD, ஜான் ஆரோக்கியசாமிக்கும், விஷ்ணு ரெட்டிக்கும் அரசியல் ஆலோசகர் பதவி, ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட்நாராயாணாவுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என பதவிகளை வாரிக் கொடுத்தார் முதல்வர் விஜய். அந்த வரிசையில் லயோலா மணிக்கும் உடனடியாக பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்று மாதங்கள் கழித்து அவருக்கு அரசு பதவி வழங்கியிருக்கிறார் முதல்வர் விஜய்.

காக்கா பிரியாணி டயலாக்கை சொல்லி விமர்சனம் செய்யும் நா.த.க-வினர்

இந்நிலையில், லயோலா மணிக்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளதை திமுகவினரை காட்டிலும் நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட அந்த கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களே ‘காக்கா பிரியாணி’ டயலாக்கெல்லாம் சொல்லி லயோலா மணிக்கு பதவி கொடுத்ததை விமர்சித்திருக்கிறார்கள்.

திண்டுக்கல் லியோனியும், வளர்மதியும் வானத்தில் இருந்து குதித்தவர்களா ?

கடந்த திமுக ஆட்சியில் திண்டுக்கல் லியோனி, அதற்கு முன்னரான அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டபோதெல்லாம் எழாத விமர்சனங்கள் லயோலா மணி நியமனத்தின்போது மட்டும் எழுந்திருக்கிறதென்றால், அதற்கு தகுதி மட்டும்தான் காரணமா? அல்லது லயோலா மணிக்கெல்லாம் அரசு பதவி கிடைத்துவிட்டதே என்ற ஆதங்கமா? என்பது புரியாத புதிராகவே உள்ளது என்கிறார்கள் தவெகவினர்

பாடநூல் கழகத் தலைவர் பதவி என்பது மெத்த படித்தவர்கள், மேதாவிகளுக்குதான் கொடுக்கப்பட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. கல்விக்கான முக்கியத்துவம் தெரிந்த, தமிழ்நாடு மாணவர்களின் நிலையை தெரிந்த யாருக்கு வேண்டுமானாலும் அந்த பதவியை கொடுக்கலாம். கடந்த காலங்களிலும் அதுதான் நடந்திருக்கிறது. ஆனால், அப்போதெல்லாம் எழாத விமர்சனம், லயோலா மணியை நியமித்த பின்னர் எழுகிறது என்றால் அதற்கு காரணம் என்னவென்ற கேள்வியும் எழாமல் இல்லை.

அரசு பதவி கிடைக்கவில்லையென்ற ஆதங்கமா ?

அதுவும் தமிழரான, தமிழ் தேசிய உணர்வாளரான லயோலா மணி நியமிக்கப்பட்டதற்கு காக்கா பிரியாணி வரை ஒப்பீடு செய்து நாம் தமிழர் கட்சியினர் விமர்சிக்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம், தங்களால் அரசு பதவியை பெற முடியவில்லை என்ற ஆற்றாமைதான் என்கிறார்கள் லயோலா மணியின் ஆதரவாளர்கள்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
Embed widget