FEFSI on Vijay: தளபதி 66 படத்தயாரிப்பாளருக்கு விஜய் போட்ட கண்டிஷன்.. நெகிழ்ச்சியில் ஃபெப்சி ஊழியர்கள்..!
நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்து ஃபெப்சி ஊழியர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்து ஃபெப்சி ஊழியர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அந்த அறிக்கையில், “ நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் 'தளபதி 66 படத்தை தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. தயாரிப்புக்குழு இந்தப்படத்தின் 75 சதவீத படப்பிடிப்பை ஹைதாராபாத்தில் நடத்த திட்டமிட்டதாகவும், விஜய் ஃபெப்சி ஊழியர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு சென்னையில் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியானது. அதன்படி தற்போது அதற்கான பணிகள் தொடங்கி இருக்கிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டியோவில் தொடங்கி இருக்கின்றன. இந்தப்பணிக்காக 100 முதல் 200 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்தப்படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு சென்னையிலும் மீதமுள்ள படப்பிடிப்பு மற்ற மாநிலங்களிலும் நடைபெறும்” என்று அதில் குறிப்ப்டப்பட்டுள்ளது.
Thank you #Thalapathy @actorvijay sir.🙏🙏🙏🙏🙏 #Thalapathy66 #Beast pic.twitter.com/o9izS9obQ3
— FEFSI (@FEFSI_UNIT) April 18, 2022
View this post on Instagram
விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கத்தில் நடிக்கிறார். தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக விளங்கும் தில் ராஜூ தயாரிக்கும் இந்தப்படத்தில் நடிகையாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் தமன் இந்தப்படம் மூலம் முதன்முறையாக விஜய்க்கு இசையமைக்க உள்ளார்.