Sarjin Kumar: பிரபலங்கள் பலரும் ரசிகர்கள்.. கன்னியாகுமரி சர்ஜின் குமார் வரலாறு தெரியுமா?
கன்னியாகுமரியின் மொழி, உணவு, சுற்றுலா இடங்கள், இவ்வளவு ஏன் குசும்பான நிகழ்வுகளை கூட நாம் காண வேண்டும் என்றால் சர்ஜின் குமார் சமூக வலைத்தளப் பக்கத்தைப் பார்க்கலாம்.

நடிகர் ஜீவா நடித்துள்ள தலைவர் தம்பி தலைமையில் படம் மூலம் சினிமாவில் பிரபல சமூக வலைத்தளப் பிரபலமான சர்ஜின் குமார் எண்ட்ரீ கொடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி எல்லை மீறி சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு ஊருக்கும், ஏன் ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு பிரபலம் உருவாகி வருகிறார்கள். உள்ளூர் சிறப்பு தொடங்கி உள்ளூரின் சுற்றுலா வரை பிரபலப்படுத்தும் நபர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மிகப்பெரிய சிறப்பு உண்டு.கேரள மாநிலத்துக்கு அருகில் இருக்கும் அந்த மாவட்டத்தில் ஒவ்வொரு ஏரியாவுக்கு தனி வட்டார வழக்கே உள்ளது. இதனையெல்லாம் புரிந்துக் கொள்ள நமக்கு கொஞ்ச காலம் ஆகலாம்.
அப்படியான நிலையில் கன்னியாகுமரியின் மொழி, உணவு, சுற்றுலா இடங்கள், இவ்வளவு ஏன் குசும்பான நிகழ்வுகளை கூட நாம் காண வேண்டும் என்றால் சர்ஜின் குமார் சமூக வலைத்தளப் பக்கத்தைப் பார்க்கலாம்.
கல்லூரி படிப்பை முடித்த பிறகு சர்ஜின் குமார் ஒரு போட்டோகிராபராக பணியாற்றி வந்தார். அப்போது கொரோனா ஊரடங்கு சமயத்தில் அடுத்து என்ன செய்யலாம் என நினைத்த நேரத்தில் யூட்யூப் சேனல் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் வந்தது. நம்மூரில் இருந்து ஒரு பையன் யூட்யூப் சேனல் தொடங்கியதைக் கண்டு கன்னியாகுமரி மக்கள் சர்ஜினுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை கொடுக்கிறார்கள். இதனால் குறுகிய காலத்திலேயே அவர் பெரிய பிரபலமாகிறார். இதனால் ஆரம்பத்தில் பொதுவெளியில் எடுத்த வீடியோ மூலம் பிரபலமான சர்ஜின், அதன்பின் பொதுவெளியில் வீடியோ எடுக்க முடியவில்லை என வருத்தப்படும் அளவுக்கு அவரின் வளர்ச்சி இருந்தது.
View this post on Instagram
அவர் தன் அம்மாவுடன் இணைந்து வீடியோக்களை கன்னியாகுமரி வட்டார வழக்கில் பதிவிடுவது வழக்கம். சர்ஜின் குமாருக்கு சினிமாவிலும் நிறைய பிரபலங்கள் ரசிகர்களாக உள்ளனர். அதன்படி நடிகை ரேகா, இவருடன் சேர்ந்து விளாக் ஒன்றை செய்திருப்பார். அதே வீடியோவில் நடிகர் கமல்ஹாசனை சந்திக்கும் வாய்ப்பையும் சர்ஜின் குமாருக்கு கிடைத்திருக்கும். அதேபோல் தலைவர் தம்பி தலைமையில் படத்தில் நடித்த நடிகர் இளவரசு இவர்களின் அதிதீவிர ரசிகராம்.
தனித்துவமான வீடியோ போட வேண்டும் என்ற நினைப்பில் கடந்த 5 ஆண்டுகளில் 100 வீடியோக்கள் போன்ற அளவில் தான் பதிவிட்டு வருகிறார். இப்படியான நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் சர்ஜின் குமார் பங்கேற்றிருந்தார். எனினும் சமூக வலைத்தளம் தான் அவரை இன்னும் பிரபலமாக்கியது. முதல் படத்தில் அவரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இனிமேல் சர்ஜின் குமாரின் வட்டார வழக்கை பல படங்களில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.





















