மேலும் அறிய

Thalaivar 171: விஜய் சேதுபதி, பிரபல 80ஸ் ஹீரோ, ஹீரோயின், பாலிவுட் நடிகர்.. நீண்டுகொண்டே போகும் தலைவர் 171 லிஸ்ட்!

Thalaivar 171: ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும்விதமாக ஏப்ரல் 22ஆம் தேதி டைட்டில் அறிவிப்புக்கான டீசர் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.

தமிழ் சினிமாவின் ஆல் டைம் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்றும் மிகவும் பிஸியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி  நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்து நல்ல ஒரு கம்பேக் படமாகவும் அமைந்தது. அதைத் தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து  இருந்தார்.  தற்போது ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். 

 

Thalaivar 171: விஜய் சேதுபதி, பிரபல 80ஸ் ஹீரோ, ஹீரோயின், பாலிவுட் நடிகர்.. நீண்டுகொண்டே போகும் தலைவர் 171 லிஸ்ட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல்ரீதியாக வேட்டையாடியது. அதன் தொடர்ச்சியாக ரஜினிகாந்தை வைத்து 'தலைவர் 171' என்ற படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றுமே தெறிக்க விடும் மாஸ் படங்களாக பட்டையை கிளப்பும். அவருடன் சூப்பர் ஸ்டார் இணைவதால் 'தலைவர் 171' படுமாஸான படமாக அமையும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 

ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும்விதமாக ஏப்ரல் 22ஆம் தேதி டைட்டில் அறிவிப்புக்கான டீசர் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. மேலும் இப்படத்திற்கு 'கழுகு' என தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து தளபதி, சிவா உள்ளிட்ட படங்களில் ரஜினி ஜோடியாக நடித்த நடிகை ஷோபனா இணைய உள்ளார் என்ற தகவலும் லீக்காகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. 

Thalaivar 171: விஜய் சேதுபதி, பிரபல 80ஸ் ஹீரோ, ஹீரோயின், பாலிவுட் நடிகர்.. நீண்டுகொண்டே போகும் தலைவர் 171 லிஸ்ட்!

மேலும் புதிய அப்டேட்டாக 'தலைவர் 171' படத்தில் 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் மோகன் வில்லனாக நடிக்க உள்ளார் என்றும், நடிகர் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் "GOAT" படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதற்கு முன்னர் வெளியான தகவலின்படி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கேமியோ ரோலிலும், நடிகர் ரன்வீர் சிங் வில்லனாகவும் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வந்தன. இருப்பினும் இந்தத் தகவல்கள் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை.    

தலைப்பு செய்திகள்

R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget