மேலும் அறிய

Shah Rukh Khan : ”உன் காதலனாக நடிக்க வேண்டும்” - ஷாருக் கானின் ஆசைக்கு சானியா மிர்சா சொன்ன பதில் என்ன தெரியுமா?

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் காதலனாக நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் ஷாருக் கானின் கருத்துக்கு சானியா மிர்சா அளித்த பதில் வைரலாகி வருகிறது.

சானியா மிர்சா

இந்திய டென்னிஸ் விளையாட்டில் மகுடம் சூடப் பட்டவர் சானியா மிர்சா. உலகளவில் பல விருதுகள் , அங்கீகாரங்கள் என டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படுகிறார். பல்வேறு இளம் பெண்கள் விளையாட்டுத் துறையில் சாதிப்பதை ஊக்குவிக்கும் ஒரு ஐ-கானாக இன்றும் இருந்து வருகிறார்.

சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவரும் துபாயில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இச்சூழலில் தான் சானியா மிர்சா சமீப காலமாக தனது கணவரிடம் இருந்து விலகி இருந்தார். இதனிடையே இவர்கள் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின. அதேநேரம் இருவரும் அதைப் பற்றி எந்த கருத்துகளையும் கூறவில்லை. மற்றொருபுறம் பிரபல பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்துடன் சோயப் மாலிக்கிற்கு நட்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இரு தரப்பில் இருந்து மறைமுகமாக விவாகரத்தை உறுதிப்படுத்தும் விதமான இன்ஸ்டாகிராம் பதிவுகள் வந்து ரசிகர்களை குழப்பிய படி இருந்தன.

அப்போது தான் சோயப் மலிக் காதலித்து வருவதாக கூறப்பட்ட சனா ஜாவேத்துடன் திருமணம் செய்துகொண்டார். இது குறித்து பேசிய சானியா மிர்சாவின் தந்தை சானியா மிர்சா இஸ்லாமிய முறைப்படி சோயப் மலிக்கிடம் குலா பெற்றுக் கொண்டதாக தகவல் தெரிவித்தார்.

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சானியா மிர்சா

பிரபல இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான தி கிரேட் கபி ஷோ தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வரும் வாரம் சிறப்பு விருந்தினராக இந்திய விளையாட்டு விராங்கனைகளான சானியா மிர்சா , மேரி கோம் , சைனா நேவால் , ஸிஃப்த் கார் சம்ரா உள்ளிட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள். தனது திருமண விவாகரத்திற்கு பிறகு சானியா மிர்சா கலந்துகொள்ளும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி இதுவாகும். இந்த நிகழ்ச்சியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை உட்பட கலகலப்பாக பல விஷயங்களை பேசியிருக்கிறார் சானியா மிர்சா. 

ஷாருக் கானின் ஆசை

View this post on Instagram
 
A post shared by Netflix India (@netflix_in)

இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரான கபில் ஷர்மா ஷாருக் கான் முன்பு ஒரு முறை தெரிவித்த ஆசையை சானியாவிடம் சுட்டிக் காட்டினார். சானியா மிர்சாவின் வாழ்க்கை படமானால் அதில் அவரது காதலனாக தனக்கு நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை ஷாருக் கான் வெளிப்படுத்தி இருந்தார். இதற்கு பதிலளித்த சானியா மிர்சா அதற்கு நான் முதலில் ஒரு காதலை தேட வேண்டுமே என்று குறும்புத் தனமாக பதிலளித்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ப்ரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking: அன்புமணி - ராமதாஸ் மோதலுக்கு காரணமான முகுந்தன் பாமக-வில் இருந்து விலகலா?
Breaking: அன்புமணி - ராமதாஸ் மோதலுக்கு காரணமான முகுந்தன் பாமக-வில் இருந்து விலகலா?
Lottery: ஒரே இரவில் கோடீஸ்வரரான வாட்ச்மேன் - இந்தியருக்கு அபுதாபியில் அடித்த ஜாக்பாட்..! நடந்தது என்ன?
Lottery: ஒரே இரவில் கோடீஸ்வரரான வாட்ச்மேன் - இந்தியருக்கு அபுதாபியில் அடித்த ஜாக்பாட்..! நடந்தது என்ன?
எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking: அன்புமணி - ராமதாஸ் மோதலுக்கு காரணமான முகுந்தன் பாமக-வில் இருந்து விலகலா?
Breaking: அன்புமணி - ராமதாஸ் மோதலுக்கு காரணமான முகுந்தன் பாமக-வில் இருந்து விலகலா?
Lottery: ஒரே இரவில் கோடீஸ்வரரான வாட்ச்மேன் - இந்தியருக்கு அபுதாபியில் அடித்த ஜாக்பாட்..! நடந்தது என்ன?
Lottery: ஒரே இரவில் கோடீஸ்வரரான வாட்ச்மேன் - இந்தியருக்கு அபுதாபியில் அடித்த ஜாக்பாட்..! நடந்தது என்ன?
எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Anbumani: யுத்தமா? பாசமா? ராமதாசை தைலாபுரத்தில் சந்திக்கும் அன்புமணி!
Anbumani: யுத்தமா? பாசமா? ராமதாசை தைலாபுரத்தில் சந்திக்கும் அன்புமணி!
TAHDCO Sanitary Mart Scheme: கடை போடலாமா..! ரூ.15 லட்சம் வரை கடன் - 4% மட்டுமே வட்டி, கொட்டிக் கொடுக்கும் தமிழக அரசு
TAHDCO Sanitary Mart Scheme: கடை போடலாமா..! ரூ.15 லட்சம் வரை கடன் - 4% மட்டுமே வட்டி, கொட்டிக் கொடுக்கும் தமிழக அரசு
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
Cow Dung: தங்கமாக மாறிய மாட்டுச் சாணம், கோடிகளில் லாபம் பார்க்கும் இந்தியா - போட்டி போட்டு வாங்கும் வெளிநாடுகள்
Cow Dung: தங்கமாக மாறிய மாட்டுச் சாணம், கோடிகளில் லாபம் பார்க்கும் இந்தியா - போட்டி போட்டு வாங்கும் வெளிநாடுகள்
Embed widget