Sandhiya Ragam: சீனு செய்த சிறப்பான சம்பவம்.. சண்டைக்கு சென்ற மாயா.. சந்தியா ராகம் சீரியலில் நடந்தது என்ன?
Sandhiya Ragam : சந்தியா ராகம் சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் புவனேஸ்வரி மாயாவை வைத்து கேம் விளையாட முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வெளியில் சென்றிருந்த சீனு நடு இரவில் யாருக்கும் தெரியாமல் சுவர் ஏறி குதித்து வீட்டிற்கு நுழைந்து தனது ரூமுக்குள் சென்று படுத்து கொள்கிறான். அந்த ரூமில் தங்கியிருந்த மாயா திடீரென யாரோ ஆண் படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவனை பெட்ஷீட் போட்டு மூடி திருடன் திருடன் என சத்தம் போட எல்லாரும் அங்கு கூடி விடுகின்றனர்.
எல்லாரும் சேர்ந்து சீனுவை அடித்து துவைத்தெடுத்த பிறகு தான் அது சீனு என்பது தெரிய வருகிறது. பத்மா டேய் டப்பா நீயா? எப்படா வந்த என்று கேட்க மாயா உங்க பையன் பேரு டப்பாவா என்று கலாய்க்கிறாள். அடுத்து சீனுவை வெளியில் படுத்து கொள்ள சொல்கின்றனர்.
அதனை தொடர்ந்து ஜானகி ரகுராமிடம் சென்று சீனுக்கு ரூம் குடுக்கணும். மாயாவை தனத்தோடு தங்கிக்க சொல்லலாம் என்று பேச அவர் அவ தனத்துடனா? வேணாம் அவளால் நம்ம பொண்ணும் கெட்டு போய்டுவா என்று பேச பார்வதி பத்மாவை கூப்பிட்டு வைத்து உன் பையனை கெஸ்ட் அவுசில் தங்க வைக்க பார்க்குறாங்க. நேத்து வந்தவ எல்லாம் அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்கா என்று மூட்டி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை ங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.