Sandhiya Ragam: அம்மன் கொடுத்த அதிர்ச்சி! மயங்கி விழுந்த மாயா! ஜானகிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - சந்தியா ராகம் அப்டேட்
சந்தியா ராகம் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போவது என்பதை கீழே விரிவாக காணலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மாயா அம்மனை பார்க்க போக எதிரே வந்த அம்மன் நீ இந்த ஊர்ல தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு கடைசி வரைக்கும் வாழ போற என்று அதிர்ச்சி கொடுக்க மாயா மயங்கி விழுந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அட்வைஸ்:
அதாவது சீனுவும் ஜானகியும் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் மாயாவை வீட்டிற்குள் அழைத்து வர அவளை ஷோபாவில் படுக்க வைக்கும் நேரத்தில் எல்லோரும் அங்கு வந்து விடுகின்றனர். எல்லோரும் மாயாவை பிடித்து கண்டபடி திட்ட மாயா அவர்களை எதிர்த்து எதிர்த்து பதில் சொல்ல ஜானகி சத்தம் போட்டு மாயாவை அடக்க ரகுராம் இந்த பிரச்சினையை இதோட விடுங்க எல்லாரும் படுத்து தூங்குங்க என்று கூட்டத்தை கலைக்கிறார்.
பிறகு ஜானகி தாங்கி ரூமுக்கு வர ரகுராம் மாயா யார் பேச்சையும் செய்யும் கேக்குறது இல்ல உன்னோட கட்டுப்பாட்டிலும் அவ இல்ல, இப்படியே விட்டா பெரிய பிரச்சனை தான் வரும். அவள உன்னுடைய கட்டுப்பாட்டில் வச்சிக்க பாரு என அட்வைஸ் கொடுத்துவிட்டு படுத்து விடுகிறார்.
கவலையில் ஜானகி:
ஜானகி சாமி சொன்னதை நினைத்து நினைத்து பார்த்து கவலைப்பட மறுநாள் மாயாவுக்கு பயங்கர காய்ச்சல் அடிக்க தனம் அவளுக்கு மாத்திரை கொடுக்கிறாள். பிறகு ஜானகியின் எழுந்து வந்து பார்க்க மாயாவுக்கு காய்ச்சலாக இருக்க வேப்பிலை அடிக்க போகலாம் என்று சொல்கின்றனர். ஆனால் மாயா அதெல்லாம் வேண்டாம் சரியாகிவிடும் என மறுப்பு தெரிவிக்கிறாள்.
இதையடுத்து சாமி என்கிட்ட என்ன சொல்லுச்சு என்று கேட்க மாயா ஏதோ சொல்லுச்சு அதுல எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்கிறாள். இருந்தாலும் என்ன சொல்லுச்சு என்று துருவி துருவி கேட்க எனக்கு இந்த ஊர்ல இருக்க பையனோட தான் கல்யாணம் நடக்கும் சார் வரைக்கும் இந்த ஊர்ல தான் இருக்க போறேன்னு சொல்லிட்டு ஆனா அதுல எனக்கு நம்பிக்கை கிடையாது என்று சொல்ல ஜானகிக்கு கவலை இன்னும் அதிகமாகிறது.
இதனால் அம்மன் சொன்னது நடக்குமா நடக்காதா என்பதை உறுதி செய்துகொள்ள அவரே ஒரு சோதனையும் செய்து பார்க்க முடிவெடுக்க அந்த சோதனை மேல் முடியும் அம்மன் சொன்னதே நடக்கும் என தெரிய வர ஜானகி பேரதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.