Parijatham: விஷால் காதலை சேர்த்து வைக்கத் துடிக்கும் சிந்தாமணி.. அப்போ இசை நிலைமை?
பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் உங்கள் முதல் சனி வர இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சிந்தாமணி ஸ்ரீஜாவை சுபத்திரா வீட்டுக்குள் அழைத்து வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
விஷாலிடம் உத்தரவாதம் தந்த சிந்தாமணி:
அதாவது, சிந்தாமணி விஷாலை சந்தித்து எனக்கு உன்னுடைய காதல் பத்தி எல்லா விஷயமும் தெரியும் அதனால தான் ஸ்ரீஜாவை கூப்பிட்டு வந்திருக்கேன். உங்கள நான் சேர்த்து வைக்கிறேன் என்று சொல்கிறாள்.
அடுத்ததாக பந்த கால் நட்ட இடத்தில் மாலை மாற்றி பொட்டு வைக்க வேண்டும் என்று சொல்ல விஷால் இசைக்கு பொட்டு வைக்க தயங்குகிறான். ராகவ் அவனை தட்ட விஷால் இசைக்கு பொட்டு வைத்து விட இதை பார்த்து ஸ்ரீஜா கடுப்பாகிறார்.
இசை பாட்டைத் திருடிய ஸ்ரீஜாவின் அம்மா:
அதன் பிறகு ஸ்ரீஜாவின் அப்பா அம்மா நன்றாக பாடுவார்கள். அதைவிட இசை இன்னும் நன்றாக பாடுகிறாள் என்பது பிளாஷ்பேக்கில் தெரிய வருகிறது. ஒரு கச்சேரியில் ஸ்ரீஜாவின் அம்மா பாட சுப்ரதா அதைப் பார்த்து பாராட்டுகிறாள்.
அங்கிருந்த இசையின் அப்பா இது என் பொண்ணு பாடுன பாட்டு, அவங்க பாடல என்று உண்மையை உடைக்க சுபத்ரா கோபமடைகிறாள். சுபத்ராவால் தனது குடும்பத்துக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழி தீர்க்கவே ஸ்ரீஜா இந்த வீட்டுக்குள் நுழைந்திருக்கிறாள் என்பது தெரிய வருகிறது.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















