Parijatham: இசையைப் பார்த்து டென்ஷனான விஷால்.. பானுமதிக்கு தெரிய வந்த காதல் கதை - பாரிஜாதத்தில் இன்று
பந்தக்கால் நடும் நிகழ்வில் இசையைப் பார்த்த விஷால் மிகுந்த கோபம் அடைகிறான். இன்று பாரிஜாதத்தில் நடக்கப்போவது என்ன? என்பதை காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் ஸ்ரீஜா விஷாலுக்கு கொடுத்த கிப்டுகள் அனைத்தும் தான் செய்து கொடுத்தது என்ற விஷயம் இசைக்கு தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
விஷாலின் காதலை அறிந்த பானுமதி:
அதாவது விஷால் ஸ்ரீஜா உடன் பேசிக்கொண்டிருக்க இதை சிந்தாமணி கவனிக்கிறாள். விஷாலுக்கு ஏற்கனவே காதல் இருக்குன்னு விஷயம் அறிந்து கொள்ளும் அவள் இதை பானுமதிக்கு தெரியப்படுத்துகிறாள்.
அடுத்த நாள் காலையில் சுப்ரதா வீட்டில் பந்த கால் நடும் வேலைகள் நடக்க விஷாலை போட்டோ எடுக்கும் ராகவ் அதை வர்ஷினிக்கு அனுப்பி வைக்க வர்ஷினி விஷால் அணிந்திருக்கும் டி ஷர்ட் கலரில் இசைக்கு டிரஸ் எடுத்துக் கொடுக்க இசையும் அதை போட்டுக்கொள்கிறாள்.
இசையைப் பார்த்து டென்ஷனான விஷால்:
அடுத்ததாக இவர்கள் பந்தக்கால் நடும் நிகழ்ச்சிக்கு வர இசையை பார்த்து விஷால் டென்ஷன் ஆகிறான். சிந்தாமணி ஸ்ரீஜாவை தனது தோழி என சொல்லி வீட்டிற்குள் அழைத்து வருகிறாள். இதனால் ஸ்ரீஜா விஷால் வீட்டில் தங்குகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















