Parijatham: விஷாலைப் பார்த்துக் கொண்ட இசை.. பிரச்சினையை செய்யும் சிந்தாமணி - பாரிஜாதத்தில் இன்று
Parijatham: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

Parijatham: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் விஷாலுக்கு உடம்பு முடியாமல் சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
விஷாலைப் பார்த்துக் கொள்ளும் இசை:
விஷால் காய்ச்சலால் அவதிப்பட இசை மெடிக்கல் ஷாப்பில் இருந்து மாத்திரை வாங்கி வந்து கொடுத்து அவனை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்கிறாள்.
அடுத்த நாள் காலையில் விஷால் மற்றும் இசை ஒரே ரூமில் இருப்பதை பார்த்த சிந்தாமணி பிரச்சனை செய்கிறாள். இன்னொரு பக்கம் இசையில் மாமா ருக்குமணி வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்கிறான்.
பாரிஜாதம்:
அடுத்ததாக சிந்தாமணி வீட்டில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டு இசையை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என சொல்கிறாள். ஆனால் சுபத்ரா இசையை வெளியே அனுப்ப முடியாது என பதிலடி கொடுக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















