Parijatham: காம்பவுண்ட் சுவர் ஏறிக்குதித்து தப்பியோடிய கதாநாயகி - பாரிஜாதம் சீரியலில் நடந்தது என்ன?
பாரிஜாதம் சீரியலில் கதாநாயகி இசை காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து ஓடிய நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ருக்குமணி இசையின் ஜாதகத்தை எரிக்க முயற்சிக்க அவளது கைகள் நடுங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
காம்பவுண்ட் ஏறி ஓடிய இசை:
அதாவது ருக்குமணியால் இசை ஜாதகத்தை எரிக்க முடியாமல் போகிறது. பிறகு அமெரிக்கா செல்லும் ஒரு போட்டோ பிரேமில் இந்த ஜாதகத்தை வைத்து அனுப்பி விடுகிறாள். அதைத் தொடர்ந்து விஷால் இசையை பார்த்து சண்டையிடுவதற்காக வீட்டுக்கு வர ,
விஷாலை பார்த்த இசை பின் பக்கமாக சுவர் ஏறி குதித்து வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகிறாள். பிறகு இசை கோவிலுக்கு வர அங்கு பானுமதியை சந்திக்கிறாள். பானுமதி என் பொண்ணு தீப்தி தான் சுப்ரதா வீட்டு மருமகள் என்று சவால் விட இசை என் தங்கச்சி தான் அந்த வீட்டுக்கு மருமகளாவாள் என்று பதிலுக்கு சவால் விடுகிறாள்.
விஷாலிடம் சிக்கிய இசை:
இதையடுத்து இசை கடைக்கு வர அங்கு விஷால் காத்துக் கொண்டிருக்க அவனிடம் சிக்கிக் கொள்கிறாள். விஷால் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை என்று சொல்ல இசை என் தங்கச்சியோட கல்யாணம் முடிகிற வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க அதுக்கப்புறம் நானே விலகி போயிருவேன் என கெஞ்சுகிறாள். ஆனால் விஷால் என்னால பொறுமையா இருக்க முடியாது இப்பவே நான் என் அம்மாகிட்ட எல்லாம் ஒன்னும் இல்லன்னு சொல்லப் போறேன் என்று கிளம்பி செல்கிறான்.
விஷால் வேக வேகமாக வீட்டுக்கு வர சுப்ரதா நேத்து கடன் செய்வதற்காக கோவிலுக்கு சென்று இருக்கிறாள் என்பது தெரிய வருகிறது. பிறகு விஷால் கோவிலுக்கு வர இசை அவனிடம் கெஞ்சியபடி பின்தொடர்ந்து வருகிறாள். விஷால் கோவிலுக்கு வந்து பார்க்க சுப்ரதா அலகு குத்தி தேர் இழுக்க அதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















