Meenakshi Ponnunga: தற்கொலைக்கு முயலும் யமுனா .. மீனாட்சி எடுத்த முடிவு - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் இதோ..!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் யமுனா இருவரும் கோவிலில் சந்தித்து கொள்வதை பார்த்த யமுனா அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதவாது, இவை அனைத்தும் ரங்கநாயகி, பூஜா மற்றும் கோகிலா ஆகியோரின் கூட்டு சதி என்பதை அறியாத யமுனா கோவிலில் வைத்து கார்த்திக்கிடம் சத்தம் போடுகிறாள். இதனால் கார்த்திக் கோபமாகி யமுனாவை பிடித்து தள்ளி விட்டு அங்கிருந்து வெளியேற அதை பார்த்து ரங்கநாயகி, பூஜா ஆகியோர் சந்தோஷமடைகின்றனர்.
View this post on Instagram
அடுத்ததாக வீட்டிற்கு வரும் யமுனா இரவில் தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள். மீனாட்சியும் துர்காவும் அவளை காப்பாற்றுகிறார்கள். பிறகு மீனாட்சி யமுனாவிடம் என்னாச்சு என்ற விசாரிக்க யமுனா, கார்த்திக் வேறு பெண்ணுடன் சுற்றுகிறான் என்று நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்ல, இதை கேட்டு அதிர்ச்சி அடையும் மீனாட்சி நான் இதை சரிசெய்கிறேன் என்று சொல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க