Karthigai Deepam: தீபாவுக்கு விளையாட்டு காட்டும் முருகன்.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடப்பது என்ன?
வாரத்தின் 7 நாட்களும் இரவு 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். வாரத்தின் 7 நாட்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தன்னுடைய நண்பர் இளையராஜாவை சந்தித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கார்த்திக் இளையராஜா வேலை செய்த கேசட் கம்பெனியை விலைக்கு வாங்கி அபிராமி ஆடியோ கம்பெனி என பெயர் மாற்றி அதில் தன்னுடைய நண்பனை முக்கிய பொறுப்பில் உட்கார வைக்கிறான். அடுத்து கார்த்திக் அங்கிருந்து கிளம்புகிறான்.தீபாவுக்கு போன் செய்து இனியன் குறித்து விசாரிக்க அவனுக்கு ஒரு பிரச்னையும் இல்ல நான் வீட்டிற்கு கிளம்பி வரேன் என்று சொல்ல கார்த்திக் ரெண்டு நாள் இருந்திட்டு வாங்க என்று சொல்ல ஒரு பிரச்னையும் இல்ல நான் வரேன் என்று சொல்லி போனை வைக்கிறாள்.
வீட்டிற்கு வந்த தீபாவிடம் மீனாட்சி இனியன் உடல்நிலை குறித்து விசாரிக்க அங்கு வரும் ஐஸ்வர்யா உடல்நிலை குறித்து விசாரித்து பணத்துக்கு என்ன பண்ண போறேன்னு பார்க்கலாம் என்று நக்கலாக பேச தீபா அவளுக்கு பதிலடி கொடுக்கிறாள். இதையெல்லாம் அபிராமி மேலே இருந்து பார்க்கிறாள்.
அதனை தொடர்ந்து தீபா வெளியே இருக்கும் முருகன் சிலை முன்பு சென்று எனக்கு ஒரு வேலை வாங்கி கொடு என்று பிராத்தனை செய்ய அப்போது நியூஸ் பேப்பர் வீட்டிற்கு வர அது பறந்து வந்து தீபா மேலே விழ அதில் அபிராமி ஆடியோ கம்பெனியில் வேலை வாய்ப்பு இருப்பதாக வந்திருக்கும் செய்தியை படித்து முருகனுக்கு நன்றி சொல்கிறாள்.
பிறகு கார்த்திக் தீபா ரூமில் இருக்கும் நேரத்தில் கார்த்திக் வீட்டில் இருப்பவர்களிடம் புதியதாக கம்பெனி வாங்கி இருக்கும் விஷயத்தை சொல்ல எல்லாரும் அவனை பாராட்டுகின்றனர். ரூமுக்கு வந்ததும் தீபாவிடமும் விஷயத்தை சொல்ல முயற்சி செய்ய அவள் சோகமாக இருப்பதால் நாளைக்கு சொல்லிக்கலாம் என்று சொல்லாமல் அமைதியாகி விடுகிறான், இனியன் குறித்து மீண்டும் கேட்டும் தீபா உண்மையை சொல்லாமல் மறைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.