Karthigai Deepam: நகையை மாற்றும் சந்திரகலா! கார்த்திக்கிடம் எடுபடுமா காளியம்மாள் சதி?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கோவில் நகையை வைத்து காளியம்மா திட்டம் ஒன்றை தீட்டிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
நகையை மாற்றும் சந்திரகலா:
அதாவது, முத்துவேல், சிவனாண்டி ஆகியோர் கோவில் நகைகளை காட்டி போலீஸ் நகைகளை செய்ய சொல்லி போலி நகைகளை உருவாக்குகின்றனர்.
பிறகு சந்திரகலாவுக்கு தெரியப்படுத்த அவள் சிசிடிவி கேமராக்களை ஆப் செய்த பிறகு நகைகளை வாங்கி மாற்றி வைக்கிறாள். ஹாலில் தூங்கிக் கொண்டிருக்கும் கார்த்திக்கு இதை எல்லாம் பார்த்து விடுவானோ என்ற பில்டப் எகிறுகிறது.
என்ன நடக்கும்?
அடுத்த நாள் காலையில் சாமுண்டீஸ்வரி வீட்டிலிருந்து நகைகள் கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. காளியம்மா நகை எல்லாம் மாற்றியாச்சா என்று கேட்க நகைகள் மாறிவிட்டது என சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















