Karthigai Deepam: உயிருக்கு போராடும் ரேவதி! கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி - அடுத்து நடப்பது இதுதான்
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று ரோகிணிக்கு ரத்தம் தேவைப்பட்டு போராடும் நிலையில் சாமுண்டீஸ்வரி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை கீழே காணலாம்.

Karthigai Deepam Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி கார்த்தியை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து சான்றிதழ் வாங்கி விசாவிற்கு அப்பளை செய்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஓ நெகட்டிவ் ரத்தம்:
அதாவது, ரேவதிக்கு உடம்பு முடியாமல் போக கார்த்திக், ரேவதிக்கு மருந்து மாத்திரை வாங்கி வந்து கொடுத்து அன்பாக கவனித்துக் கொள்கிறான். இதையடுத்து மயில் வாகனம் மற்றும் ரோகினி ஆகியோர் கோவிலுக்கு வருகின்றனர். சிவனாண்டி இவர்களை யாக பூஜைக்கு அனுப்ப கூடாது என்று திட்டமிட்டு சதி திட்டம் தீட்ட ரோகிணிக்கு அடிபட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்படுகிறாள்.
ரோகினி ஓ நெகட்டிவ் ரத்தம் தேவைப்படுவதாக டாக்டர் சொல்கிறார். வீட்டில் யாருக்கும் ஓ நெகட்டிவ் ரத்தம் இல்லை என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகின்றனர்.
சாமுண்டீஸ்வரி ஆவேசம்:
ஒரு கட்டத்தில் மயில் வாகனத்திற்கு பாட்டிக்கு ஓ நெகட்டிவ் தான் என தெரிய வந்து பாட்டியை அழைத்து வருகிறான். பரமேஸ்வரியை பார்த்த சாமுண்டீஸ்வரி இங்க எதுக்கு வந்த என்று ஆவேசப்படுகிறாள்.
என் பொண்ணு செத்தாலும் பரவாயில்லை அவளுக்கு நீ ரத்தம் கொடுக்க கூடாது என்று கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















