Karthigai Deepam: முருகன் தந்த தைரியம்! மணமேடையில் ஏறும் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் என்ன நடக்கும்?
நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறும் நிலையில், கார்த்திக்கை மணமகன் என நினைத்து ரேவதி தோழிகள் மேடை ஏற்றும் சூழலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.
![Karthigai Deepam: முருகன் தந்த தைரியம்! மணமேடையில் ஏறும் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் என்ன நடக்கும்? Zee Tamil Karthigai Deepam Serial 19th December 2024 revathi engagement know today episode here Karthigai Deepam: முருகன் தந்த தைரியம்! மணமேடையில் ஏறும் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் என்ன நடக்கும்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/19/7c60d883dbb41ac45918af5d4182a0be1734596499963102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் "முருகன் பரமேஸ்வரி பாட்டியிடம் கார்த்திக்கும் ரேவதிக்கும் தான் கல்யாணம் நடக்கும். நீ நிச்சயத்துக்கு போ" என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பாட்டியை உள்ளே செல்லக் கூறும் முருகன்:
அதாவது மண்டபத்துக்குள் எப்படியாவது போய் விட வேண்டும் என்று பரமேஸ்வரி பாட்டி கிளம்பி வருகிறாள். ஆனால் எப்படி உள்ளே செல்வது என்று தெரியாமல் தயங்கி நிற்கிறாள். இந்த சமயத்தில் மீண்டும் பாட்டி முன்னாடி தோன்றும் முருகன், "தயக்கம் இல்லாமல் உள்ளே போ பாட்டி. கூட்டத்தோடு கூட்டமாக உள்ளே போனால் உன்னை யார் கண்டுபிடிக்க போறா? பயப்படாமல் போ" என்று சொல்ல பாட்டியும் உள்ளே வந்து விடுகிறாள்.
அடுத்து சிவனாண்டி மண்டபத்திற்குள் வந்து சாமுண்டீஸ்வரியை சந்தித்து, "என்ன சாமுண்டீஸ்வரி உன் பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் பண்ண போறியா?" என்று கேட்க, சாமுண்டீஸ்வரி "அலங்காரத்தைய எல்லாம் பார்த்தியா? எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கு பாரு.. போய் வயிறு நிறைய சாப்பிட்டு போ.. இந்த மாதிரி சாப்பாட்டை எல்லாம் நீ சாப்பிட்டு கூட இருக்க மாட்ட" என்று நக்கலாக பேசுகிறாள்.
மேடையேறும் கார்த்திக்:
அதன் பிறகு ரேவதியின் தோழிகள் மண்டபத்திற்குள் நுழைகின்றனர். மாப்பிள்ளை யார்? என்று தெரியாமல் பாட்டியிடம் மாப்பிள்ளை யார் என்று கேட்க, பாட்டி கார்த்தியை கை காட்ட மாப்பிள்ளை சூப்பரா ஸ்டைலாக இருப்பதாக பேசி கொள்கின்றனர்.
அடுத்து கேக் வெட்ட ஏற்பாடு செய்து ரேவதியை அழைத்து வந்து மாப்பிள்ளை என நினைத்து கார்த்தியையும் மேடைக்கு ஏற்றுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)